TN SCHOOL EDUCATION DEPARTMENT HAS DECIDED NOT TO INVOLVE TEACHERS OVER THE AGE OF 50 IN THE ELECTION WORK VIN
50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்த போவதில்லை - பள்ளிக்கல்வித்துறை முடிவு
மாதிரிப்படம்
கொரோனா தொற்று காரணமாக 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களை பட்டியலில் சேர்க்கக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்த போவதில்லை என, தமிழக பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வாக்குசாவடி அலுவலர், வாக்குச்சாவடி கண்காணிப்பு உள்ளிட்ட தேர்தல் பணிகளில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிகளவில் ஈடுபடுத்தப்படுவது வழக்கம்.
இதனைக் கருத்தில் கொண்டு தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களின் விவரங்களை சேகரிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதற்கான பணிகளை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களை பட்டியலில் சேர்க்கக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், மருத்துவ சிகிச்சைக்கான காரணங்கள் தவிர தேர்தல் பணியில் இருந்து ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்கக்கூடாது என்றும் அவ்வாறு விலக்கு பெறும் ஆசிரியர்கள் உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.