Home /News /tamil-nadu /

'மாணவர்கள் போதைப் பொருள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்க வேண்டும்' - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

'மாணவர்கள் போதைப் பொருள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்க வேண்டும்' - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

பள்ளிக்கல்வித்துறை

பள்ளிக்கல்வித்துறை

TN Schools : "நாளை பள்ளி மாணவர்கள் போதை பொருள் உறுதிமொழி எடுக்க வேண்டும்" - பள்ளிக்கல்வித்துறை

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    மாணவர்களுக்கு போதைப் பொருள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அனைத்து மாணவர்களையும் உறுதிமொழி எடுக்க செய்ய வேண்டும் என பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து அரசு / அரசு உதவிபெறும் / சுயநிதி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 11.08.2022 முற்பகல் 10.30 மணிக்கு விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கும் நிகழ்வும் 12.08.2022 முதல் 19.08.2022 வரை விழிப்புணர்வு வாரத்தைத் தொடர்ந்து செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    எனவே, மேற்கூறிய அனைத்து வகைப் பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களிடையே போதைப் பொருள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த இணைப்பில் கண்டுள்ளவாறு 11.08.2022 அன்று முற்பகல் 10.30 மணிக்கு உறுதிமொழி எடுக்க அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களை அறிவுறுத்தவும், அந்நிகழ்விற்குப் பின் நேரலையில் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் விழிப்புணர்வு குறும்படத்தை மாணவர்களுக்குக் காட்டவும், உறுதிமொழி எடுத்த விவரத்தினை இணைப்பில் கண்டுள்ள படிவத்தில் பள்ளிவகை வாரியாக நிரப்பி இவ்வாணையரக இணை இயக்குநர் (நாட்டு நலப்பணித் திட்டம்) msectndse@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பிற்பகல் 12.30 மணிக்குள் 'கல்வி மாவட்ட வாரியான அறிக்கையினை அனுப்பி வைக்க முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Students, Tamil Nadu

    அடுத்த செய்தி