கடந்த ஆகஸ்ட் மாதம் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவர்களின் கையில் சாதி கயிறு கட்ட தடை விதித்ததை தொடர்ந்து ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது.
பள்ளிகளில் சாதியைக் குறிக்கும் வகையில், மாணவர்கள் வண்ணக்கயிறுகள் கட்டக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதி, சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
தென் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்கள், தாங்கள் சார்ந்திருக்கும் சாதியைக் குறிக்கும் வகையில் கைகளில் வண்ணக்கயிறுகள், ரப்பர் பேண்ட்கள் அணிவதை வழக்கமாக கொண்டுள்ளனர். மேலும், சாதிக்கொடிகளை பிரதிபலிக்கும் வகையில் நெற்றியில் பொட்டு வைக்கின்றனர்.
இதனால், பள்ளிகளில் மாணவர்கள் சாதிக்குழுக்களாக இயங்குவதாகவும், இவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டால் சாதிய மோதலாக உருவாவதாகவும் புகார் எழுந்தது.
பள்ளி மாணவர்கள் சாதிகளை குறிக்கும் வண்ணங்களில் கயிறு கட்டுவதை தடுக்க பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பினார்.
இதற்கு தி.மு.க எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்திருந்தனர்.
பள்ளி கல்வி துறை ஆணையர் கண்ணப்பன் பள்ளி மாணவர்கள் கைகளில் கயிறு, நெற்றியில் பொட்டு வைப்பது கூடாது என்ற சுற்றறிக்கையை வாபஸ் பெற வேண்டும். இது இந்து விரோத செயல் என்று பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா ட்வீட் செய்திருந்தார்.
Also see...
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.