Home /News /tamil-nadu /

தொடர் மழை: 14 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

தொடர் மழை: 14 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை

பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை

தமிழகத்தில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக இன்று 14 மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

    தமிழகத்தில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக இன்று 14 மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.  தொடர்ந்து, இன்று ஒருசில பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும்  என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்  இன்று இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி,

    பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை

    தூத்துக்குடி

    திருநெல்வேலி

    செங்கல்பட்டு

    காஞ்சிபுரம்

    திருவள்ளூர்

    சென்னை

    தஞ்சாவூர்

    விழுப்புரம்

    கன்னியாகுமரி

    பள்ளிக்கு மட்டும் விடுமுறை

    திருவாரூர்

    நாகப்பட்டினம்

    திருவண்ணாமலை

    கடலூர்

    ராணிப்பேட்டை

    ஆகிய மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிக்களுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரியில் விடுமுறை

    புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி-கல்லூரிகளுக்கு இன்று (29ம்தேதி),நாளை(30ம் தேதி)  என இரண்டு நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: School Holiday, Weather News in Tamil

    அடுத்த செய்தி