TN Corona: தமிழகத்தில் இன்றைய (ஜூன் 27) கொரோனா நிலவரம்: 100க்கும் கீழ் குறைந்த பலி எண்ணிக்கை!

மாதிரிப் படம்

சென்னையில் சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 3555 ஆகவும், கோவையில் 5608 ஆகவும், ஈரோட்டில் 4320 ஆகவும் உள்ளது

  • Share this:
தமிழகத்தில் இன்று 5127 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தமிழக சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் சிறிது சிறிதாக குறைந்து வரும் நிலையில் தமிழகத்திலும் பாதிப்பின் அளவு தினந்தோறும் குறைந்து வருகிறது. இதனையடுத்து இன்றைய கொரோனா நிலவரம் குறித்த அறிக்கையை தமிழக சுகாதாரத்துறை வெளிட்டிருக்கிறது. அதன்படி கடந்த 24 மணிநேரத்தைப் பொறுத்தவரையில் 5127 பேருக்கு புதிதாக நோய்த்தொற்று உறுதியாகி உள்ளது.

தமிழகத்திலேயே அதிக அளவாக கோவையில் 649 பேருக்கும், ஈரோட்டில் 530 பேருக்கும், சேலத்தில் 343 பேரும், திருப்பூரில் 316 பேரும், சென்னையில் 308 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 248 பேரும், தஞ்சையில் 244 பேரும் புதிதாக நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Also Read:  சந்திர பிரியங்கா: புதுச்சேரியில் 40 வருடங்களுக்கு பின் அமைச்சராகியிருக்கும் 2வது பெண்!

சென்னையில் சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 3555 ஆகவும், கோவையில் 5608 ஆகவும், ஈரோட்டில் 4320 ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் 7159 பேர் சிகிச்சையில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதே போல 91 பேர் பலியாகியுள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 32,290 ஆக உயர்ந்துள்ளது. நேற்று வரை 44924 ஆக இருந்த சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை இன்றைய அடிப்படையில் 42801 ஆக குறைந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இன்று ஒரே நாளில் 1,63,817 மாதிரிகள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளாது. இதுவரை 3,23,54,310 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
Published by:Arun
First published: