தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,205 பேருக்கு கொரோனா பாதிப்பு; 43 பேர் உயிரிழப்பு

மாதிரி படம்

தமிழகத்தில் அதிகபட்சமாக இன்று கோயம்புத்தூரில் 241 பேருக்கும், சேலத்தில் 163 பேருக்கும், ஈரோட்டில் 143 பேருக்கும், சென்னையில் 137 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • Share this:
    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 2,205 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 43 பேர் உயிரிழந்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா 2வது அலை பரவத் தொடங்கியது. ஏப்ரல் மாதத்தில் கொரோனா பரவல் அதிகரித்த நிலையில், மே மாதத்தில் இது உச்சமடைந்தது. தற்போது இந்த பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது.

    இந்நிலையில், இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 1,45,814 மாதிரிகள் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 2,205 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 25,33,323 ஆக உயர்ந்துள்ளது.

    Also read: புதுச்சேரியில் குழந்தைகளுக்கு அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு...!

    கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 2,802 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில்,24,71,038 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

    இன்று 28,590 பேர் கொரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதித்து இன்று மட்டும் 43 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 33,695 ஆக அதிகரித்துள்ளது.

    தமிழகத்தில் அதிகபட்சமாக இன்று கோயம்புத்தூரில் 241 பேருக்கும், சேலத்தில் 163 பேருக்கும், ஈரோட்டில் 143 பேருக்கும், சென்னையில் 137 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
    Published by:Esakki Raja
    First published: