தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மூன்று இலக்கத்தில் கொரோனா பாதிப்பு!

கொரோனா தொற்று

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்துவரும் நிலையில், கோவை, ஈரோடு, சென்னை, சேலம் ஆகிய நான்கு மாவட்டங்களிலும் மூன்று இலக்கங்களில் கொரோனா  பாதிப்பு பதிவாகியுள்ளது. 

 • Share this:
  தமிழகத்தின் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்துவரும் நிலையில், 4 மாவட்டங்களில் மூன்று இலக்கங்களில் பாதிப்பு பதிவாகியுள்ளது.

  தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா 2வது அலை பரவத் தொடங்கியது. ஏப்ரல் மாதத்தில் கொரோனா பரவல் அதிகரித்த நிலையில், மே மாதத்தில் இது உச்சமடைந்தது. தற்போது இந்த பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்நிலையில், இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 1,40,897 மாதிரிகள் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 1,819 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 25,46,689 ஆக உயர்ந்துள்ளது.

  மேலும் படிக்க: கொரோனா பயத்தில் 15 மாதங்களாக வீட்டிற்குள்ளேயே முடங்கிய குடும்பம்…


  கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 2,583 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில் 24,88,775 பேர் வீடு திரும்பியுள்ளனர். 24,025 பேர் கொரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதித்து இன்று மட்டும் 27 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 33,889 ஆக அதிகரித்துள்ளது.

  இதையும் படிங்க: சார்பட்டா திமுகவின் பிரச்சாரப் படம்: ஜெயக்குமார்!


  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்துவரும் நிலையில், கோவை, ஈரோடு, சென்னை, சேலம் ஆகிய நான்கு மாவட்டங்களிலும் மூன்று இலக்கங்களில் கொரோனா  பாதிப்பு பதிவாகியுள்ளது.  அதிகபட்சமாக கோவையில் 175 பேருக்கும் ஈரோட்டில்  132 பேருக்கும் சென்னையில்  127 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. பிற மாவட்டங்களில் இரட்டை இலக்கங்களில் மட்டுமே பாதிப்பு பதிவாகியுள்ளது. பெரம்பலூர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் 7, 9 என ஒற்றை இலக்கங்களிலேயே பாதிப்பு பதிவாகியுள்ளது.
  Published by:Murugesh M
  First published: