Home /News /tamil-nadu /

ரேஷன் கடைகளில் இனி பாக்கெட் அரிசி! - உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு

ரேஷன் கடைகளில் இனி பாக்கெட் அரிசி! - உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு

ரேஷன் பொருள் வழங்கல் துறையில் முக்கிய அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.

ரேஷன் பொருள் வழங்கல் துறையில் முக்கிய அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.

pocket rIce for ration card: அஞ்சல் துறை வழியாக புதிய மின்னணு குடும்ப அட்டைகளை பயனாளிகளின் இருப்பிடத்திற்கே அனுப்பப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

    ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு இனி பாக்கெட்களில் மட்டுமே அரிசி வழங்கப்படும் என்று தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

    கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் இன்று சட்டப்பேரவையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று புதிய அறிவிப்புகளை வெளியிட்ட உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, இந்திய அஞ்சல் துறை வழியாக புதிய மின்னணு குடும்ப அட்டைகளை பயனாளிகளின் இருப்பிடத்திற்கே அனுப்பப்படும் என்று தெரிவித்தார்.

    தற்போது புதிய மின்னணு குடும்ப அட்டைகளை பயனாளிகள் வட்ட வழங்கல் அலுவலகம் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் மண்டல அலுவலகங்கள் மூலமாக பெற்று வருகின்றனர்.

    இதையும் படிங்க - 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியம் உயர்வு..!

    உறுதி செய்யப்பட்ட சேவையினை அளிக்கும் பொருட்டு நேரடியான தொடர்பினை தவிர்க்கும் பொருட்டும் இந்திய அஞ்சல் துறையின் மூலம் பயனாளிகள் இருப்பிடத்திற்கு பயனாளிகளின் விண்ணப்பத்தின் பேரில், புதிய மின்னணு குடும்ப அட்டைகள் அனுப்பப்படும் என தெரிவித்தார்.

    இதைத் தொடர்ந்து ரேஷன் கடைகளில் இனிமேல் பாக்கெட்டுகளில் அரிசி வழங்கப்படும் என்ற முக்கிய அறிவிப்பையும் அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டார்.

    பொதுமக்கள் வரவேற்க தக்க வகையிலும் பணிபுரியும் நியாய விலை கடை விற்பனையாளர்கள் மற்றும் ஒவ்வொரு ஆண்டும் மாநில அளவில் 3 நிலைகளிலும் மாவட்ட அளவில் 2 நிலைகளிலும் பரிசுகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க - கிருஷ்ணகிரியில் 18,973 லிட்டர் ஆவின் பால் கெட்டுப்போன விவகாரம்... ஊழியர்களிடம் நஷ்டஈடு வசூலிக்கப்படும் - அமைச்சர் நாசர்

    ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி தரமற்றதாக இருப்பதாக ஆங்காங்கே புகார்கள் வந்த நிலையிl, பாக்கெட்டுகளில் அரிசி வழங்கப்படும் என்ற அறிவிப்பை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டிருக்கிறார்.
    Published by:Musthak
    First published:

    Tags: Ration, Ration Shop, TN Assembly

    அடுத்த செய்தி