Home /News /tamil-nadu /

பிளாஸ்டிக் உறையோடு பொருட்களை விற்கும் 95 நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு

பிளாஸ்டிக் உறையோடு பொருட்களை விற்கும் 95 நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு

நெகிழி இல்லா தமிழகம்

நெகிழி இல்லா தமிழகம்

பதஞ்சலி, பிரிட்டானியா, கவின்கேர் உள்ளிட்ட 95 நிறுவனங்களுக்கு மாசு கட்டுப்பாடு வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது

  • News18
  • Last Updated :
தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை அமல்படுத்தப்பட்ட பின்னரும், பிளாஸ்டிக் கவர்களில் அடைக்கப்பட்ட பொருட்களை விற்றுவரும் 95 நிறுவனங்களுக்கு தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழகத்தில் கடந்த மாதம் முழு பிளாஸ்டிக் தடை அமலுக்கு வந்தது. மறு சுழற்சி செய்ய இயலாத பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டது.

எனினும், பெரு நிறுவனங்கள் பிளாஸ்டிக் கவர்களை தொடர்ந்து பயன்படுத்தி வந்தது. இந்நிலையில், இது தொடர்பாக தமிழக அரசு அத்தகைய நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கவின்கேர், பதஞ்சலி, பிரிட்டானியா உள்ளிட்ட 95 நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள நோட்டீசில், பிளாஸ்டிக் கவர்களை உருவாக்கும் நிறுவனங்களே அதனை அகற்றுவதற்கான செயல்திட்டங்களை உருவாக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.



தமிழக அரசுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Also See...

Published by:Sankar
First published:

Tags: Plastic Ban

அடுத்த செய்தி