• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கூடன்குளத்தில் அணுக் கழிவு மையம்! கருத்து கேட்பு கூட்டத்துக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஏற்பாடு

கூடன்குளத்தில் அணுக் கழிவு மையம்! கருத்து கேட்பு கூட்டத்துக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஏற்பாடு

கூடங்குளம்

கூடங்குளம்

அணுவுலையில் உருவாகும் புளூட்டோனியம் கழிவுகள், உலைக்கு வெளியே எடுக்கப்பட்டு கூடங்குளம் வளாகத்திற்குள்ளாகவே பாதுகாப்பாக வைக்கப்படும் வசதிதான் Away From Reactor எனப்படும் அணுக்கழிவு மையம்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் Away From Reactor எனப்படும் அணுக்கழிவு மையம் அமைப்பதற்கு ஜூலை 10-ம் தேதி ராதாபுரத்தில் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறும் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

    அணுஉலைக்கு வெளியே அமைக்கப்படும்
    அணுக்கழிவு மையம்(Away From Reactor)எனப்படும். இந்த அணுக்கழிவு இந்தியாவிலேயே முதன் முதலாக கூடங்குளத்தில்தான் அமைக்கப்படவுள்ளது.

    கூடன்குளம் அணு உலை மையத்தில் 1000 மெகாவாட் திறன்கொண்ட இரண்டு அணு உலைகள் செயல்பட்டுவருகின்றன. அந்த அணுஉலைகளில் எரிபொருளாக பயன்படும் யுரேனியும் பயன்பாட்டுக்குப் பிறகு, புளூட்டோனியம் அணுக்கழிவாக மாறுகிறது.

    அந்தக் கழிவு, அணு உலைக்கு கீழே உள்ள குட்டையில் சேமிக்கப்படுகிறது. அந்தக் குட்டையில் சேமிக்கப்படும் அணுக் கழிவுகளை எட்டு ஆண்டுகளுக்கு மட்டுமே சேமிக்க முடியும். எனவே, அணுவுலையில் உருவாகும் புளூட்டோனியம் கழிவுகள், உலைக்கு வெளியே எடுக்கப்பட்டு கூடங்குளம் வளாகத்திற்குள்ளாகவே பாதுகாப்பாக வைக்கப்படும் வசதிதான் Away From Reactor எனப்படும் அணுக்கழிவு மையம்.

    இந்த மையத்தில் நிரந்தரமாக கழிவுகள் சேமித்து வைக்கப்படாது என்றாலும் நிரந்தரமாக அணுக்கழிவுகளை சேமித்து வைப்பதறகான Deep Geological Repository வசதியை ஏற்படுத்தும்வரை அணுக் கழிவு மையத்தைக்(away from reactor) கட்டக்கூடாது என்று பலவேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவுத்துள்ளனர்.

    கூடங்குளம் அணுஉலை தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் கடந்த 2012-ம் ஆண்டு வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில் 2013-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் 15 நிபந்தனைகளைக் கூறி அசு உலை செயல்பட அனுமதித்தது. அதில் முக்கியமான நிபந்தனையானது அணுக்கழிவுகளை உலைக்கு வெளியே பாதுகாப்பாக வைப்பதற்கான அணுக் கழிவு மையத்தை(away from reactor)5 ஆண்டுகளில் உருவாக்க வேண்டும் என்பதாகும்.

    ஐந்து ஆண்டு கால அவகாசம் 2018 மார்ச் மாதமே முடிந்த நிலையில், மேலும் 5 ஆண்டுகள் கால அவகாசம் வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2018 பிப்ரவரி மாதம் இந்திய அணுமின் சக்தி கழகம் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. இந்த அணுக் கழிவு மையம் கட்டமைப்பதில் உள்ள தொழில்நுட்பம் முழுவதுமாக கைவராத நிலையில் அதை அமைப்பதில் சிக்கல்களை சந்தித்து வருகிறோம். அதனால்தான் மேலும் 5 ஆண்டுகள் அவகாசம் வேண்டும் எனக் கூறியிருந்தது. இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் 2022-ம் ஆண்டு வரைக்கும் கால அவகாசம் அளித்திருந்தது.

    இந்த அணுக்கழிவு மையத்தை அமைப்பதற்கு சுற்றுச்சூழல் மற்றும் கடலோர மண்டல அனுமதிகோரி கடந்த 2016-ஆம் ஆண்டு விண்ணப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் இதை அமைப்பதற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் ஜூலை 10-ம் தேதி ராதாபுரத்தில் உள்ள என்.வி.சி. அரசு பள்ளியில் நடைபெறும் என தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: