Home /News /tamil-nadu /

காவி சாயம் விவகாரம்... ரஜினியின் இரட்டை கருத்து

காவி சாயம் விவகாரம்... ரஜினியின் இரட்டை கருத்து

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

  • News18
  • Last Updated :
    காவி சாயம் பூசப்படுவதாக ரஜினி பேசியது அரசியல் கட்சியினரிடையே சலசலப்பு ஏற்பட்டது.

    சென்னை போயஸ் கார்டன் வீட்டில் நவம்பர் 8-ம் தேதி காலை ரஜினிகாந்த் பேட்டியளிக்கையில், திருவள்ளுவருக்கு காவிச்சாயம் பூசியது போல என் மீது பாஜக சாயம் பூச முயற்சி நடக்கிறது. திருவள்ளுவரும் சிக்கமாட்டாரு நானும் சிக்க மாட்டேன் என்று தனது ஸ்டைலில் கூறினார்.

    மேலும், பாஜகவின் தலைவராக தன்னை நிறுவ முயற்சி நடக்கிறது என்றும் அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

    இந்த கருத்துக்கள் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், போயஸ் கார்டனில் மீண்டும் செய்தியாளர்களை சந்தித்து ரஜினிகாந்த் பேட்டியளிக்கையில் “என் மீது காவிச்சாயம் பூச முயற்சிப்பது இந்த கால அரசியலில் சகஜம். நான் எப்போதும் வெளிப்படையாக பேசி வருகிறேன். இதனை ஊடகங்கள் பெரியதாக்குகின்றன என்று வேறு ஒரு கருத்தை தெரிவித்தார்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: YearEnder 2019

    அடுத்த செய்தி