பேசு பொருளாகும் கொங்கு நாடு விவகாரம்.. கட்சித் தலைவர்களின் அபிப்ராயம் என்ன?

தமிழ்நாடு அரசியல் தலைவர்கள்

கொங்கு நாட்டை தனியாக பிரிப்பதற்காக எந்த விதையும் போடப்படவில்லை என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

 • Share this:
  கொங்கு நாடு என்ற தனி மாநில விவகாரம் பேசு பொருளாகி உள்ள நிலையில், தமிழ்நாட்டில் பிரிவினைவாதத்துக்கு இடம் கிடையாது என்றும், விஷமக்குரல்களை ஆரம்பத்திலேயே மத்திய, மாநில அரசுகள் அடக்க வேண்டியது அவசியம் எனவும் பல்வேறு கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

  கோவை, சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய கொங்கு மண்டலம், கொங்கு நாடு என்ற தனி மாநிலமாக உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. சில பாஜக-வினரும் அதை வலியுறுத்தி பேசி வருகின்றனர். இதற்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

  சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துகோனின் 311வது பிறந்தநாளையொட்டி, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அடுத்த கட்டாலங்குளத்தில் அவரது உருவச்சிலைக்கு திமுக எம்பி கனிமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டை யாராலும் பிரிக்க முடியாது என்றார்.

  ALSO READ |  தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து நலம் விசாரித்த மு.க. ஸ்டாலின்

  தமிழ்நாட்டில் பிரிவினை வாதத்துக்கு இடம் கிடையாது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரிவினையை தூண்டும் பாஜகவின் முயற்சியை மக்கள் ஏற்க மாட்டார்கள் எனவும், கொங்கு நாடு என்பது ஒரு கற்பனையான வாதம் எனவும் குறிப்பிட்டார்.  தமிழ்நாட்டை பிரிக்க வேண்டும் என எழுந்திருக்கும் விஷமக் குரல்களை மத்திய, மாநில அரசுகள் அடக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், சுயலாபத்துக்காக தமிழர்களை சாதி ரீதியாக கூறு போட நினைப்பதை ஒரு நாளும் அனுமதிக்க முடியாது என்றும், குறிப்பிட்டுள்ளார்.

  ALSO READ |   ஜூலை 21ம் தேதி பக்ரீத் பண்டிகை: தலைமை ஹாஜி அறிவிப்பு!

  இதற்கிடையே, கொங்கு மண்டலத்தை தனி யூனியன் பிரதேசமாக பிரிக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் விருப்பமாக உள்ளது என பாஜக மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாமக நிறுவனர் ராமதாஸ் வடதமிழகம், தென்தமிழகம் என இரண்டாக பிரிக்க வேண்டுமென ஏற்கெனவே தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.  தமிழ்நாட்டில் இருந்து கொங்கு நாடு பிரிக்கப்படுமா என்ற அச்சம் யாருக்கும் தேவையில்லை என பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநிலம் இரண்டாக பிரிக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக இருந்தால் அதனை நிறைவேற்றுவதே அரசின் கடமை என்றும் குறிப்பிட்டார்.

  ALSO READ |  பொதுமக்களை இன்று நேரில் சந்தித்து மனுக்களை பெறுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

  கொங்கு நாட்டை தனியாக பிரிப்பதற்காக எந்த விதையும் போடப்படவில்லை என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

   
  Published by:Sankaravadivoo G
  First published: