சமூக வலைதளங்களில் விஷமக் கருத்துக்கள்... தமிழக காவல் துறை கடும் எச்சரிக்கை...!

சமூக வலைதளங்களில் விஷமக் கருத்துக்கள்... தமிழக காவல் துறை கடும் எச்சரிக்கை...!
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: November 9, 2019, 1:04 PM IST
  • Share this:
அயோத்தி நிலம் தொடர்பான தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீராக இருப்பதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

மாநிலம் முழுவதும் சட்டம் ஒழுங்கை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக டிஜிபி ஜே.கே திரிபாதி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, மேற்கு மண்டலத்திற்கு ஏ.டி.ஜி.பி சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய மண்டலத்தின் சட்டம் ஒழுங்கை ஏ.டி.ஜி.பி சைலேஷ்குமார் யாதவ் கண்காணித்துவருகிறார். வடக்கு மண்டலத்திலுள்ள மாவட்டங்களை ஏ.டி.ஜி.பி தாமரைக்கண்ணன் கூடுதலாக கவனிக்கிறார். தெற்கு மண்டலத்தில் நிலவும் சூழலை ஏ.டி.ஜி.பி மகேஷ் குமார் அகர்வல் தலைமையிலான குழு கண்காணிக்கிறது.


சிபிசிஐடி, பொருளாதார குற்றப்பிரிவு, போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு, குற்றத்தடுப்பு ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் காவலர்களை சட்ட ஒழுங்கு பணியில் ஈடுபடவும் தமிழக டி.ஜி.பி ஜே.கே திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

சட்ட ஒழுங்கு பணியில் 1 லட்சம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளர். மக்கள் கூட்டம் அதிகமுள்ள பகுதிகளை கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் பதட்டம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளை கண்டறிந்து அங்கும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் விஷமக்கருத்துக்களை பரப்புவர்களின் மீதும் கடும் நடவடிக்கை பாயும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.
First published: November 9, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்