முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பெண்ணிடம் கண்ணியக் குறைவாக பேசிய காவலர்.. வருத்தம் தெரிவித்த டிஜிபி சைலேந்திர பாபு

பெண்ணிடம் கண்ணியக் குறைவாக பேசிய காவலர்.. வருத்தம் தெரிவித்த டிஜிபி சைலேந்திர பாபு

DGP Sylendra Babu

DGP Sylendra Babu

DGP Sylendra Babu | எங்களைக் குறைத்து மதிப்பிட்டு, இரவு 10 மணிக்குப் பிறகு வட இந்தியாவில் சுற்றித் திரியுங்கள் என்று மரியாதைக் குறைவு செய்தார். 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பணியில் இருந்த காவலர், பொறுப்பற்ற வகையில் நடந்து கொண்டதற்காக தமிழ்நாடு காவல்துறை ஆணையர் சைலேந்திர பாபு வருத்தம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மதுமிதா பைத்யா என்பவர் தனது ட்விட்டர் கணக்கின் மூலம் காவல்துறை அதிகாரிகள் தன்னை  மிகவும் தரக்குறைவாக பேசியாக குற்றிஞ்சாட்டினார். தனது ட்விட்டர் பதிவில், " நேற்று இரவு இசிஆர் சாலையில் சி ஷெல் அவென்யூவில்  பணியில் இருந்த  காவலர் மிகக் கண்ணிய குறைவாக நடந்து கொண்டார்.

அலுவலகம்  முடித்து நானும், எனது நண்பரும் மிகுந்த கட்டுப்பாடு மற்றும் கண்ணியத்துடன் கடற்கரையில் அமர்ந்திருந்தோம். கடற்கரையில் அனுமதிக்கப்படுவதற்கான நிலையான நேரம் குறித்து நாங்கள் அறிந்திருக்கவில்லை. அப்போது, பணியில் இருந்த காவலர் ஒருவர் எங்களை தீவிரவாதி மற்றும் குற்றவாளிகளைப் போல்  உருவகித்து எங்களிடம் பொறுப்பற்ற வெறுப்பைக் காட்டினார். எங்களைக் குறைத்து மதிப்பிட்டு, இரவு 10 மணிக்குப் பிறகு வட இந்தியாவில் சுற்றித் திரியுங்கள் என்று மரியாதைக் குறைவு செய்தார்.  நான், வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்தவள்.  என்னை, வடஇந்தியர்  என்று எப்படி பொதுமைப்படுத்த முடியும். தமிழ் மொழி பேச தெரியாது என்பதற்காகவா?  

எனது நியாயமான பதில்களை கேட்க மறுத்துதோடு மட்டுமல்லாமல், போலீஸ் வாகனத்தில் அழைத்து சென்று வழக்குப்பதிவு செய்யப்  போவதாகவும் மிரட்டினார். ஏன், இவ்வாறு நடக்கிறது என்பது எனக்குத் தெரியவில்லை.  மேலும், கடற்கரையில் மக்கள் அனுமதிக்கப்படும்  நேரம் குறித்து எந்த நிலையான அறிவிப்பும் இல்லை. தயவு செய்து ஒழுக்கம் மாற்றம் நடத்தை முறைகள் குறித்து நல்ல முறையில் பயிற்சி கொடுங்கள்.  இவைகள், அனைத்தும் சாதாரண விஷயங்கள் அல்ல. நான் குற்றவாளி அல்ல என மீண்டும் ஒருமுறை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்" என்று தெரிவித்தார்.   

இதற்குப் பதிலளித்த தமிழ்நாடு கால்வதுறை ஆணையர், "  பணியில் இருந்த காவலர், பொறுப்பற்ற வகையில் நடந்து கொண்டதற்காக வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். முழுமையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட அதிகாரி மீது உரிய முறையில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

First published:

Tags: TN Police