Home /News /tamil-nadu /

ஜெயின் கோயிலில் தங்க பூஜைப் பொருட்களை திட்டுமிட்டு திருடிய குஜராத் பூசாரி கைது.

ஜெயின் கோயிலில் தங்க பூஜைப் பொருட்களை திட்டுமிட்டு திருடிய குஜராத் பூசாரி கைது.

காட்சிப் படம்

காட்சிப் படம்

ரூ.45 லட்சம் மதிப்புள்ள பூஜைப் பொருட்களை 4 வது முயற்சியில் தூக்கிய குஜராத்த் திருடர்கள் சிக்கியது எப்படி?

கீழ்ப்பாக்கம் ரங்கநாதர் அவென்யூவில் உள்ள ஸ்ரீ கீழ்பாக்கம் ஸ்வதாம்பர் முர்டிபுஜக்ட் ஜெயின் சன்க் என்ற ஜெயின் கோவில் உள்ளது. இந்த கோவிலில் துணைத் தலைவராக இருந்து வரும் கிம் ராஜ் சாக்கரியா (56) என்பவரின் மனைவி மீனா சாக்கரியா கடந்த 13ஆம் தேதி மதியம் பூஜை செய்வதற்காக கோவிலுக்கு வந்துள்ளார்.

மீனா சக்கரியா பூஜை செய்வதற்காக தங்கத்தட்டு, தங்க கிண்ணம் பெரியது மற்றும் சிறியது தங்க ஊதுபத்தி ஸ்டாண்ட் தங்க விசிறி தங்க கண்ணாடி பிரேம் தங்க கலசம் என பல லட்சம் மதிப்பிலான தங்க பூஜை பொருட்கள் மற்றும் 350 கிராம் வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை கொண்டு வந்துள்ளார்.

பூஜை முடித்து கருவறையை மூன்று முறை சுற்றி வந்து விட்டு பார்த்தபோது தான் கொண்டு வந்திருந்த தங்க பொருட்கள் மற்றும் வெள்ளிப் பொருட்கள் காணாமல் போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த நிலையில் காணாமல் போன பல லட்சம் மதிப்பிலான பொருட்களை கண்டுபிடித்து தருமாறு கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

கீழ்ப்பாக்கம் போலீசார் சம்பவ இடம் சென்று சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது பூப்போட்ட நீல நிற சட்டை அணிந்த நபர் ஒருவர் கையில் பச்சை நிற பையை உள்ளே எடுத்து வருவதும் சிறிது நேரத்தில் அவசர அவசரமாக அவர் பதறி அடித்து ஓடுவதும் தெரியவந்தது.

இதையும் வாசிக்க திருவொற்றியூரில் தொழிற்சாலைகளில் இருந்து வாயு கசிவு.. பொதுமக்கள் பாதிப்பு

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இரண்டு நாட்களாக விடுமுறை வேண்டும் என அங்கு பூசாரியாக பணியாற்றிய குஜராத்தைச் சேர்ந்த விஜய் மோத்திலால் ராவல்(37) என்பவர் கேட்டதாக போலீசாருக்கு தெரியவந்தது. மேலும் அவர் பெங்களூர் செல்லவிருப்பதாக கூறி தலைமறைவானதும் தெரியவந்தது.

இதனையடுத்து ஓசூர் பகுதியில் தலைமறைவாக இருந்த பூசாரியை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். அவரது செல்போனை கைப்பற்றி கிடுக்குபிடி விசாரணை நடத்தினர். கடந்த 10 நாட்களில் யாருக்கெல்லாம் தொலைபேசியில் பேசினார் என்பதை கண்டறிந்தனர். அப்பொழுது கர்நாடகா மாநிலம் ஹூப்ளியில் நகைக்கடை ஒன்றில் பணிபுரிந்து வந்த குஜராத்தைச் சேர்ந்த தனது நண்பர் மகேந்திரன் என்பவருடன் அவர் அடிக்கடி பேசியது விசாரணையில் தெரியவந்தது.

இதையும் வாசிக்க:  கணவர் தலைமறைவு: சாலை ஓரத்தில் தங்குகிறேன்- ஆட்சியரிடம் குஜராத்தைச் சேர்ந்த 8 மாத கர்ப்பிணி பெண் புகார்

மேலும், விசாரணையில் கடந்த ஒன்றை ஆண்டுகளாக விஜய் மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் அர்ச்சகராக பணியாற்றி வந்துள்ளார் எனவும் அவருக்கு உணவு உடை, தங்குமிடம் அனைத்துமே வழிபாட்டுத் தல நிர்வாகிகள் இலவசமாக வழங்கி வந்துள்ளதும் தெரியவந்தது. பின்னர் பூசாரியாக வேலை செய்யும் விஜய் மோத்திலால் ராவலுக்கு மது, புகைப்பழக்கம் இருந்தது கோவில் நிர்வாகத்திற்கு தெரிய வர அவரை பணிநீக்கம் செய்வதற்கு கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனால் கோவில் நிர்வாகத்தின் மீதும் விஜய் ஆத்திரத்தில் இருந்துள்ளார் எனவும் தெரியவந்தது.

இதனால் தினமும் தங்க பூஜைப்பொருட்களுடன் பூஜைக்கு வரும் மீனா சாக்கரியாவிடம் திருடி தனது சொந்த ஊருக்கு சென்றுவிடலாம் என பூசாரி திட்டமிட்டதும் அதன்படி திட்டத்தைக்கூறி தனது நண்பரான மகேந்திரனை சில தினங்களுக்கு முன் சென்னை வரவழைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுப்பட்டதும் தெரியவந்தது.

திட்டமிட்டப்படி விஜய் மோத்திலால் லாட்ஜில் தங்கிக்கொண்டு, மகேந்திரனை வழிபாட்டுத்தலத்தை நோட்டமிட செய்துள்ளார். கிம்ராஜ் சர்க்காரியாவின் மனைவி மீனா சர்க்காரியா கொண்டுவரும் தங்க பூஜைப் பொருட்களை திருட, மூன்று நாட்களாக மகேந்திரன் அவரை பின்தொடர்ந்து சென்றதும் ஆனால், மூன்று முறை திருட்டு முயற்சி தோல்வியடைந்ததும் தெரியவந்தது.

நான்காவது முயற்சியில் கடந்த 13 ம் தேதி மதியம் 43 சவரன் தங்கத்தை திருடிக்கொண்டு ஆட்டோ மூலமாக தப்பினார். பின்னர் விஜய் மோதிலாலும் மகேந்திரனும் கோயம்பேடு சென்று மதுக்குடித்துவிட்டு பின்னர் மகேந்திரனை ஹூப்ளி அனுப்பி வைத்து பின்னர் தான் வேறொரு பேருந்தில் பெங்களூருக்கு செல்ல திட்டமிட்டுள்ளார் பூசாரி விஜய் மோத்திலால் ராவல்.

இதன் பின்னர் ஓசூர் ஜூஜூவாடி பகுதியில் இறங்கி அங்கு தலைமறைவாக தங்கியிருந்த விஜய் மோத்திலால் ராவலை போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.

இதையும் வாசிக்க:  வீரநாயக்கன் குளத்தில் சாக்கடைக் கழிவுகள், இறைச்சிக் கழிவுகள்- தண்ணீர் பாழ்படுவதால் பொதுமக்கள் வேதனை

மேலும், மகேந்திரனை பிடிக்க ஹூப்ளிக்கு போலீசார் விரைந்த போது ஹூப்ளியில் உள்ள தனது சகோதரரிடம் பல லட்சம் மதிப்பிலான தங்க பூஜைப் பொருட்கள் மற்றும் வெள்ளி பொருட்களை விற்று பணம் அனுப்பி விடு என கூறி, மகேந்திரன் குஜராத் புறப்பட்டு சென்றுள்ளது தெரியவந்தது.

மகேந்திரனின் சகோதரரிடமிருந்து தங்க பூஜைப் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் மகேந்திரனை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் குஜராத் பூசாரியான விஜய் மோத்திலால் ராவலை கைது செய்து சிறையிலடைத்தனர்.
Published by:Salanraj R
First published:

Tags: Crime News

அடுத்த செய்தி