+2 தேர்வு நடத்தலாமா? வேண்டாமா? - முடிவெடுக்க முடியாமல் குழப்பம்

அன்பில் மகேஷ்

+2 தேர்வு பொதுத் தேர்வு தொடர்பாக நடைபெற்ற மருத்துவக்குழு மற்றும் உளவியல் குழு மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்துள்ளன.

 • Share this:
  தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ப்ளஸ் டூ மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. ஜூன் மாதத்தில் கொரோனா தொற்றின் நிலையை பொறுத்து, பின்னர் பொதுத் தேர்வுகளின் தேதிகள் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

  இந்நிலையில் சிபிஎஸ்இ மாணவர்களுக்கான ப்ளஸ் டூ  பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசானது சமீபத்தில் அறிவித்தது. இதனையடுத்து தமிழகத்தில் ப்ளஸ் டூ பொதுத்தேர்வு நடத்தப்படுமா அல்லது ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களிடையே எழுந்தது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதனையடுத்து தமிழகத்தில் ப்ளஸ் டூ பொதுத்தேர்வை நடத்தலாமா அல்லது ரத்து செய்வதா என்று பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களிடம் தமிழக அரசு கருத்து கேட்டிருந்தது. அதைத்தொடர்ந்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்களுடன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனைக்கு பிறகு தேர்வு குறித்து மருத்துவ நிபுணர்கள், உளவியல் நிபுணர்களுடனும் ஆலோசிக்கப்படும் என்றும், அனைத்து தரப்பினர் தெரிவிக்கும் கருத்துக்களின் அடிப்படையில் முதலமைச்சர் உரிய முடிவை அறிவிப்பார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

  இந்நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் +2 தேர்வு பொதுத் தேர்வு தொடர்பாக நடைபெற்ற மருத்துவக்குழு மற்றும் உளவியல் குழு மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்துள்ளன. ஒரு சிலர் தேர்வு நடத்த வேண்டாம் எனவும் ஒரு சிலர் தேர்வு நடத்த வேண்டும் எனவும் தெரிவித்து உள்ளனர். ஜூலை மாத இறுதியில் சிறிய இடைவெளி விட்டு தேர்வை நடத்திக் கொள்ளலாம், மொழி பாடங்களை தவிர்த்து மற்ற பாடங்களுக்கு தேர்வு நடத்த வேண்டும் என்று ஆலோசனையும் வழங்கியதாக தெரிகிறது. இப்படி மாறுபட்ட கருத்துக்கள் வருவதால், +2 தேர்வை நடத்தலாமா? வேண்டாமா? என்ற குழப்பம் நீடித்து வருகிறது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: