ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தபால் துறைத் தேர்வில் தமிழ் மறுக்கப்பட்ட விவகாரம்! மாநிலங்களவையில் கொந்தளித்த தமிழக எம்.பிக்கள்

தபால் துறைத் தேர்வில் தமிழ் மறுக்கப்பட்ட விவகாரம்! மாநிலங்களவையில் கொந்தளித்த தமிழக எம்.பிக்கள்

திருச்சி சிவா, நவநீத கிருஷ்ணன்

திருச்சி சிவா, நவநீத கிருஷ்ணன்

இந்தத் தேர்வுகள் ஆங்கிலம், இந்தி மற்றும் பிற மாநில மொழிகளில் நடத்தப்பட்டது. அதை இப்போது மாற்றி இந்தி மற்றும் ஆங்கிலத்தில் நடத்தும்படி கூறப்பட்டுள்ளது.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  தபால்துறைத் தேர்வில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தேர்வு நடத்தப்படாததைக் கண்டித்து தமிழக எம்.பிக்கள் மாநிலங்களவையில் கடுமையாக கேள்வி எழுப்பியுள்ளனர்.

  தபால் துறை காலி பணியிடங்களுக்கான போட்டித் தேர்வின் முதல் தாளில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்த விவகாரத்தை தமிழகத்தைச் சேர்ந்த அதிமுக மற்றும் திமுக எம்பிக்கள் மாநிலங்களவையில் இன்று எழுப்பினர்.

  இந்த விவகாரம் தொடர்பாக மாநிலங்களைவில் பேசிய அ.தி.மு.க எம்.பி நவநீத கிருஷ்ணன் பேசுகையில், ’கிராமப் புறங்களில் காலியாக உள்ள தபால்காரர், உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வின் வினாக்கள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே இருந்தன. தமிழில் கேள்விகள் இடம்பெறவில்லை. எனவே, நேற்று நடந்த தபால் துறை தேர்வை அரசு ரத்து செய்ய வேண்டும். தமிழ் மொழியில் புதிதாக தேர்வு நடத்தப்பட வேண்டும்” என்றார்.

  இதுகுறித்து மாநிலங்களவையில் பேசிய தி.மு.க எம்.பி. திருச்சி சிவா, “தபால் துறைத் தேர்வு தொடர்பாக மத்திய அரசு சமீபத்தில் அனுப்பி உள்ள சுற்றறிக்கை தமிழ்நாட்டில் வாழும் இளைஞர்கள் மனதில் போராட்ட எண்ணத்தை தூண்டி உள்ளது. இதற்கு முன்னதாக, இந்தத் தேர்வுகள் ஆங்கிலம், இந்தி மற்றும் பிற மாநில மொழிகளில் நடத்தப்பட்டது. அதை இப்போது மாற்றி இந்தி மற்றும் ஆங்கிலத்தில் நடத்தும்படி கூறப்பட்டுள்ளது.

  ஏற்கனவே மத்திய அரசு வேலைகளில் குறிப்பாக ரயில்வே துறை வேலைகளில் எங்கள் மாணவர்கள் மிகவும் பின்தங்கி உள்ளனர். எனவே, மத்திய அரசு தனது சுற்றறிக்கையை திரும்ப பெறுவதுடன், பிற மாநில மொழிகளில் தேர்வை நடத்தவேண்டும்” என்றார்.

  அதன்பின்னர் பேசிய சபாநாயகர் வெங்கையா நாயுடு, ‘உறுப்பினர்கள் எழுப்பிய இந்த விவகாரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதுகுறித்து மாநிலங்களவை பா.ஜ.க தலைவர் தாவர்சந்த் கெலாட் ஆராய வேண்டும். நான் ஏற்கனவே சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் பேசிவிட்டேன். நீங்களும் அமைச்சரிடம் பேசுங்கள்’ என்று தெரிவித்தார்.

  Also see:

  Published by:Karthick S
  First published:

  Tags: Postal Exam, Tamil