ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஆன்லைன் ரம்மியை தடைச் செய்ய அவசரச் சட்டம்: தமிழக அமைச்சரவை ஒப்புதல்

ஆன்லைன் ரம்மியை தடைச் செய்ய அவசரச் சட்டம்: தமிழக அமைச்சரவை ஒப்புதல்

ஆன்லைன் ரம்மி

ஆன்லைன் ரம்மி

Online Rummy Ban: ஆளுநரின் ஒப்புதலைப் பெற்றப்பிறகு அவசரச்சட்டம் அமலுக்கு வரும் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஆன்லைன் சூதாட்டத்தை தடுப்பதற்கான அவசரச் சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

  ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் வகையில் கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இந்நிலையில் பொறுப்பேற்ற திமுக அரசு, இணையவழி சூதாட்டங்களை தடுப்பதற்கு புதிய சட்டம் இயற்றும் வகையில். அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு குழுவை அமைத்தது.

  அக்குழு கடந்த ஜூன் மாதம் அரசிடம் அறிக்கை அளித்த நிலையில், பொதுமக்களிடம் கருத்துக் கேட்கப்பட்டது. இதையடுத்து சட்டத்துறையின் ஆலோசனையுடன் ஒரு அவசரச் சட்டம் தயாரிக்கப்பட்ட ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற அமைச்சரவையின் கூட்டத்தில் வைக்கப்பட்டது.

  இந்நிலையில், அக்டோபர் மாதம் இரண்டாவது வாரத்தில், சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக விரிவாக ஆலோசிக்க, சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

  இதையும் படிங்க: 2024ல் மத்தியில் ஸ்டாலின் மாடல் ஆட்சி அமையும் என நம்புகிறேன் - நியூஸ்18 கருத்தரங்கில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

  . இதில், ஆன்லைன் விளையாட்டுக்களை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக ஆய்வுக்குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், ரம்மி போன்ற ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் அவசர சட்டத்திற்கு, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டதாக  தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆளுநரின் ஒப்புதலைப் பெற்றப்பிறகு அவசரச்சட்டம் அமலுக்கு வரும் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.

  Published by:Murugesh M
  First published:

  Tags: Online rummy, TN Govt