அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று உறுதி!

அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்

இன்று காலை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எஸ் எஸ் சிவசங்கர் கலந்து கொள்ளவில்லை.

  • Share this:
அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குன்னம் தொகுதி எம்.எல்.ஏவும் தமிழகத்தின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான எஸ் எஸ் சிவசங்கர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எஸ் எஸ் சிவசங்கர் கலந்து கொள்ளவில்லை.

இது தொடர்பாக அவர் தனது ஃபேஸ்புக்கிலும் பதிவிட்டுள்ளார். அதன்படி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன். ஒரு வாரத்திற்கு வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். நலமாக உள்ளேன். அருள்கூர்ந்து அலைபேசியில் அழைக்க வேண்டாம்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அடையாறில் உள்ள தனது வீட்டில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

 
Published by:Arun
First published: