சித்த மருத்துவம் மீது சந்தேகப் பார்வை வந்தது ஏன்? விளக்கம் அளித்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சித்த மருத்துவம் மீது சந்தேகப் பார்வை வந்தது ஏன்? விளக்கம் அளித்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
அமைச்சர் பாண்டியராஜன்
  • Share this:
இந்தியாவில் ஒருங்கிணைந்த மருத்துவப் படிப்பு இல்லாததே தமிழகத்தில் சித்த மருத்துவம் மீது சந்தேகப் பார்வையை உருவாகியுள்ளது என்று தமிழக அமைச்சர் கே.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா சித்தா மருத்துவமனை இயக்குனர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் தமிழக அமைச்சர் கே.பாண்டியராஜன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘தண்டையார்பேட்டை பாதிக்கப்பட்டவர்கள் 18 சதவீதம், குணமடைந்தவர்கள் 80 சதவீதமாக உள்ளது. இந்தியாவைத் தாண்டி குணமடைந்தவர்கள் புள்ளி விவரம் தமிழகத்தில் தான் அதிகம். கொரோனா காலத்திலும் இந்தியாவிலேயே ஜிடிபி வீழ்ச்சி தமிழகத்தில் தான் குறைவு.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட தமிழக அமைச்சர்கள் தனியார் மருத்துவமனையில் சேர்வது தனி நபர் விருப்பம். சித்த மருத்துவத்திற்காக ஊக்கமும், ஆக்கமும் தமிழக அரசு தந்துள்ளது. சீனாவில் மருத்துவ மாணவர்கள் ஒராண்டு கலாச்சார மருத்துவம் படிக்க வேண்டும். ஆனால் இந்தியாவில் ஒருங்கிணைந்த மருத்துவப் படிப்பு இல்லாததே சந்தேக பார்வைக்கு காரணம். தமிழக அரசு சித்தாவை மேம்படுத்த முக்கியதுவம் கொடுக்கிறது. அதனை நிரூபிக்க உயர்நீதிமன்றமும் தங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்துள்ளது’ என்று தெரிவித்தார்.
First published: July 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading