• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • இயற்கையாக அமைந்த இந்த மெகா கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்: அமைச்சர் ஜெயக்குமார்!

இயற்கையாக அமைந்த இந்த மெகா கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்: அமைச்சர் ஜெயக்குமார்!

அமைச்சர் ஜெயக்குமார்

அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுக கூட்டணி என்பது இயற்கையான கூட்டணி. இலை, பூ, பழம் என அனைத்தும் இயற்கையாக அமைந்துள்ளது. ஆனால், திமுகவில் கொதிக்கும் சூரியன், வெட்டப்பட்ட கை, பம்பரம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    அதிமுக கூட்டணி இயற்கையாக அமைந்த கூட்டணி. இந்த மெகா கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்தார்.

    குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு நெல்லூரில் இருந்து காணொலி காட்சி மூலம் நெல்லூர் - சென்னை பயணிகள் ரயிலை கொடியசைத்து துவக்கி வைத்தார். அதேபோல் சென்னையில் திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் 1.42 கோடி ரூபாய் செலவில் ரயில்வே நடை மேம்பாலம் உள்ளிட்ட பல திட்டங்களையும் அவர் துவக்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சி தமிழக அமைச்சர்கள் ஜெயகுமார், பெஞ்சமின், மாஃபா பாண்டியராஜன், அதிமுக எம்.பி. நவநீத கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறும்போது, ’தமிழகத்தில் குறிப்பாக சரக்கு ரயில் முனையம் திருவொற்றியூரில் அமைக்க வேண்டும்’ என்றார்.

    மேலும் ராயபுரத்தில் ரயில் முனையம் அமைக்க வேண்டும் என்று கூறிய அவர், டெல்லி - லக்னோ ரயில் பயணம் 4மணி நேரம் இருப்பது போல சென்னை - கன்னியாகுமரிக்கு விரைவு பயண சேவை துவங்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தார்.

    அதேபோல் ரயில் தண்டவாள கட்டமைப்புக்கான நிதியை அதிகப்படுத்தி தர வேண்டும் என மாஃபா பாண்டியராஜன் கோரிக்கை விடுத்தார்.

    அதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ’தென்சென்னையை போல வடசென்னையும் வளர்ச்சி அடைய 16,000 கோடி ரூபாய் செலவில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

    மேலும் இரும்பு மற்றும் நிலக்கிரி கையாளுவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுக்க, 160 கோடி ரூபாய் பாதை போடப்பட்டுள்ளது எனவும் இது முழுமை பெறும் போது வடசென்னையில் போக்குவரத்து முற்றிலுமாக சீராகும் எனவும் கூறினார்.

    2,600 கோடி ரூபாய் மதிப்பில் வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் வரையிலான 2-வது மெட்ரோ ரயில் சேவை விரைவில் துவங்க இருக்கிறது.

    தமிழகத்தின் பிற மாவட்டங்களைப் போன்று வடசென்னை அனைத்து வசதிகளை பெற்று அனைத்து வளங்களும் பெறும் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் உறுதியளித்தார்.

    அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், ’5 வருடத்தில் வட சென்னை எல்லா கட்டமைப்பு கொண்ட சிறந்த மாவட்டமாக வளர்ந்து விடும் என்றும்,
    இன்று தொடங்கப்பட்டுள்ள இந்தத் திட்டம் வட சென்னைக்கு கிடைத்துள்ள ஒரு வர பிரசாதம் என்று கூறினார்.

    மேலும் ஒரு காலத்தில் மெட்ரோ ரயில் திட்டம் தமிழகத்தில் வருமா, சாத்தியமா என்ற கேள்வியை பலரும் எழுப்பினர். ஆனால் தற்போது அந்த கனவு நினைவாகி உள்ளது. அதேபோன்று படிப்படியாக அனைத்து திட்டங்களையும் அரசு விரைவில் நிறைவேற்றும் என்றார்.

    இந்நிலையில் அதிமுக கூட்டணி என்பது இயற்கையான கூட்டணி. இலை, பூ, பழம் என அனைத்தும் இயற்கையாக அமைந்துள்ளது. ஆனால், திமுகவில் கொதிக்கும் சூரியன், வெட்டப்பட்ட கை, பம்பரம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

    எனவே இந்த மெகா கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். அதுமட்டுமின்றி திமுகவை காட்டிலும் கூட்டணி மற்றும் தேர்தல் பணியில் விவகாரத்தில் அதிமுக ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது என்று கூறினார்.

    காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதி ஒதுக்கீடு குறித்த கேள்விக்கு, திமுக வலுவிழந்து  உள்ளதால் தான் காங் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கி உள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: