• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சாலையில் தனிமையில் தவித்த முதியவர்: காரிலிருந்து இறங்கிவந்து உதவிய அமைச்சர் ஜெயக்குமார்

சாலையில் தனிமையில் தவித்த முதியவர்: காரிலிருந்து இறங்கிவந்து உதவிய அமைச்சர் ஜெயக்குமார்

ஜெயக்குமார்

ஜெயக்குமார்

  • Share this:
    சென்னை ராயபுரம் பகுதியில் சாலையில் அமர்ந்திருந்த ஆதரவற்ற முதியவருக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உணவு வழங்கி அவரை காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை எடுத்தார். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை துறைமுகம் பகுதியில் காய்கறி கடைகளுக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பும் வழியில் துறைமுகம் தொகுதி கிளைவ் பகுதி அருகே 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், உணவின்றி அமர்ந்திருந்ததை பார்த்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அந்த முதியவருக்கு மாஸ்க் கொடுத்து பயன்பாட்டிற்கு ஒரு சால்வையும் வழங்கி, உணவு, தண்ணீர் உள்ளிட்டவையும் வழங்கினார்.

    மேலும் அவரின் செலவிற்கு பணம் கொடுத்துவிட்டு மாநகராட்சி அதிகாரிகளுக்கு முதியவர் குறித்த தகவலை கொடுத்து காப்பகத்தில் அனுமதிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார் அமைச்சர் ஜெயக்குமார். அந்த முதியவர் பெயர் திருநாவுக்கரசு. ஐ.சி.எப் பகுதியைச் சேர்ந்தவர் என்பது பின்னர் தெரியவந்தது.

    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: