• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • எம்.ஜி.ஆர்., ஸ்டாலின் வழியில் 'திராவிட நடிகர்' உதயநிதி.. புகழ்ந்து தள்ளிய எ.வ.வேலு

எம்.ஜி.ஆர்., ஸ்டாலின் வழியில் 'திராவிட நடிகர்' உதயநிதி.. புகழ்ந்து தள்ளிய எ.வ.வேலு

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின் என சொல்லும் போதெல்லாம் தங்களுக்கு எல்லாம் இரட்டிப்பு மகிழ்ச்சி என அமைச்சர் எவ.வேலு புகழாரம்.

  • Share this:
    ராமனுக்கு அனுமன் போல, ராஜராஜ சோழனுக்கு ராஜேந்திர சோழன் போல திமுக ஆட்சியமைக்க முதல்வருக்கு உறுதுணையாக இருந்தவர் உதயநிதி என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு புகழாரம்.

    பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறைகள் மீதான விவாதத்திற்கு பதிலளிக்கும் முன் பேசிய அமைச்சர் எவ.வேலு, கே ஆர் ராமசாமி, பி வி நாராயாணசாமி, எஸ் எஸ் ராஜேந்திரன், எம் ஜி ஆர், மு.க.ஸ்டாலின் வழியில் திரையுலகத்தில் திராவிட கொள்கைகளை எடுத்துச் சொல்வதற்கும் நம்முடைய பிரச்னைகளையும் எடுத்துச் சொல்வதற்கும் நகைச்சுவை தென்றலாக உதயநிதி உலாவிக் கொண்டிருக்கிறார் என பேசினார்.

    Also Read: ஒன்றுபட்டு நின்றால் நம்மை யாரும் வீழ்த்த முடியாது - மேகதாது விவகாரத்தில் துரைமுருகன் உறுதி!

    உதயநிதி ஸ்டாலின் என சொல்லும் போதெல்லாம் தங்களுக்கு எல்லாம் இரட்டிப்பு மகிழ்ச்சி எனவும், திமுக திரையுலகில் பட்டுப்போய்விடுமோ என்று அஞ்சிய நிலையில், நமக்கு ஒரு திராவிட நடிகர் கிடைத்திருப்பதாகவும் அமைச்சர் பேசினார்.

    தேர்தல் நேரத்தில் முதலமைச்சர் பிரச்சாரத்திற்கு செல்ல முடியாத கிராமப்புற தொகுதிகளின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் சென்று பிரச்சாரம் செய்து இன்று மேஜை தட்டும் பல சட்டமன்ற உறுப்பினர்கள் உருவாக உந்து சக்தியாக இருந்தவர் எனவும் எ.வ.பாராட்டினார். ராஜாராஜ சோழனுக்கு துணையாக ராஜேந்திர சோழன் இருந்தது போல ராமனுக்கு துணையாக அனுமன் போல திமுக ஆட்சி கட்டி முடிக்க முதலமைச்சருக்கு துணையாக இருந்தவர் உதயநிதி எனவும் புகழ்ந்தார்.

    Also Read: தொழிலதிபரை காரில் கடத்திய ஃபைனான்சியர் - கடனும் கடத்தல் பின்னணியும்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    திரையுலகில் இருந்து புரட்சித்திலகம் எம்.ஜி.ஆர் முதலமைச்சரானது போல, மு.க.ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராகி, அமைச்சராகி, துணைமுதலமைச்சராகி முதலமைச்சர் ஆகியுள்ளதாகவும் அந்த வழியில் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதியில் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆகியிருப்பதாகவும் அமைச்சர் எவ.வேலு பெருமிதம் கொண்டார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: