மத்திய நீர்வளத்துறை அமைச்சரை துரைமுருகன் இன்று சந்திக்கிறார்..

துரைமுருகன்

மூன்று நாள் பயணமாக நேற்று டெல்லி வந்த அமைச்சர் துரைமுருகன், மத்திய அமைச்சருடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

 • Share this:
  மேகதாது அணை விவகாரம் தொடர்பாக இன்று மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்திக்கிறார் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்

  மூன்று நாள் பயணமாக நேற்று டெல்லி வந்த அமைச்சர் துரைமுருகன், இன்று நண்பகல் 12 மணிக்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை சந்தித்து பேசுகிறார்.

  மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டும் விவகாரம், தென் பெண்ணை ஆற்றின் கிளை நதியான மார்க்கண்டேய நதியின் குறுக்கே கட்டப்படும் அணை, காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு உரிய நீர் பங்கீடு / திறப்பு தொடர்பாக இந்த சந்திப்பின் போது மத்திய அமைச்சருடன் துரைமுருகன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Sankaravadivoo G
  First published: