Home /News /tamil-nadu /

அதிரடி கட்டண உயர்வு.. ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் 26ம் தேதி அமைச்சர் ஆலோசனை

அதிரடி கட்டண உயர்வு.. ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் 26ம் தேதி அமைச்சர் ஆலோசனை

ஆம்னி பேருந்து

ஆம்னி பேருந்து

ஆம்னி பேருந்து சங்கங்கள் ஒவ்வொன்றும் தன்னிச்சையாக பேருந்து கட்டணங்களை அறிவித்துள்ள நிலையில் அனைத்து சங்கத்தினருக்கும் அமைச்சர் சிவசங்கர் அழைப்பு விடுத்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    ஆம்னி பேருந்துகளின் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்ட நிலையில், வரும் 26 ம் தேதி திங்கள்கிழமை மாலை ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் , ஆம்னி பேருந்து சங்க நிர்வாகிகளை சென்னையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் சந்தித்து பேசுகிறார்.

    விழாக்காலங்களில் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுகின்றன. கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் மீது அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், ஆம்னி பேருந்துகளின் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அனைத்து வழித்தடங்களிலும் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளுக்கான அதிகபட்ச கட்டணத்தை, அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் நிர்ணயித்திருக்கிறது.

    4500 ரூபாய் வரை கட்டணம் வசூல் செய்யப்படுவதாக ஆம்னி பேருந்து நிர்வாகங்கள் அறிவித்த நிலையில் கட்டண நிர்ணயம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த போக்குவரத்து துறை அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளது. வரும் 26 ம் தேதி திங்கள்கிழமை மாலை ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் , ஆம்னி பேருந்து சங்க நிர்வாகிகளை சென்னையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் சந்தித்து பேசுகிறார்.

    ஆம்னி பேருந்து சங்கங்கள் ஒவ்வொன்றும் தன்னிச்சையாக பேருந்து கட்டணங்களை அறிவித்துள்ள நிலையில் அனைத்து சங்கத்தினருக்கும் அமைச்சர் சிவசங்கர் அழைப்பு விடுத்துள்ளார்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Bus fare hike, Omni Bus

    அடுத்த செய்தி