கோக், பெப்சி விற்பனை விரைவில் நிறுத்தப்படும்: வணிகர் சங்கம் அதிரடி!

ஆன்லைன் வணிகத்தால் சில்லறை வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் சில்லறை வணிகத்தை காப்பாற்ற வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது எனவும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் தெரிவித்தார்.

கோக், பெப்சி விற்பனை விரைவில் நிறுத்தப்படும்: வணிகர் சங்கம் அதிரடி!
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: May 15, 2019, 3:24 PM IST
  • Share this:
தமிழகத்தில் அன்னிய பொருட்களான கோக், பெப்சி விற்பனை முற்றிலும் நிறுத்தப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் அறிவித்துள்ளார்.

விழுப்புரத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் மாநில தலைவர் வெள்ளையன், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வணிகர்கள் இருசக்கர வாகனத்தில் சென்று ஆகஸ்ட் 15-ம் தேதி திருச்சியில் ஒன்று கூடி, சுதேசி பிரகடனம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.


தொடர்ந்து பேசிய வெள்ளையன், கடைகளில் அந்நிய பொருட்களான கோக் மற்றும் பெப்சி போன்றவற்றை முன்னிலைப்படுத்துவது குறைக்கப்படும். பின்னர் படிப்படியாக அந்நிய பொருட்களின் விற்பனை  முற்றிலும் நிறுத்தப்படும் எனவு தெரிவித்தார்.

மேலும் ஆன்லைன் வணிகத்தால் சில்லறை வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் சில்லறை வணிகத்தை காப்பாற்ற வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது எனவும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் தெரிவித்தார்.

Also see...
First published: May 15, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading