தமிழகம் முழுவதும் இன்றும், நாளையும் சலூன் கடைகள் இயங்கலாம்!

தற்போதுள்ள கட்டுப்பாடுகளின் படி, சலூன் கடைகள் திறப்பதற்கு அனுமதியில்லை. எனினும், தொடர்ந்து 14 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், இரு தினங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள கட்டுப்பாடுகளின் படி, சலூன் கடைகள் திறப்பதற்கு அனுமதியில்லை. எனினும், தொடர்ந்து 14 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், இரு தினங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 • Share this:
  தமிழகம் முழுவதும் இன்றும், நாளையும் இரு தினங்களுக்கு சலூன் கடைகள் இயங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

  இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. நாள் ஒன்றுக்கு 4 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தைப் பொறுத்துவரை நாள் ஒன்றுக்கு 26,000-த்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

  கொரோனா பாதிப்புகளைக் கட்டுப்படுத்த முடியாமல் மத்திய, மாநில அரசுகள் திணறி வருகின்றன. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு நேர ஊரடங்கு என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனினும், கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

  இந்தநிலையில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழகத்தில் வரும் 10-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த ஊரடங்கு காலத்தில் அத்தியாவசியக் கடைகள் திறந்திருப்பதற்கு எந்த தடைகளும் விதிக்கப்படவில்லை. உணவகங்கள், தேநீர் கடைகள், மளிகைக்கடைகள் செயல்பட நண்பகல் 12 மணி வரை அனுமதிக்கப்படுகிறது.

  ஏற்கெனவே, தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளின் காரணமாக உணவகங்கள், தேநீர் கடைகள், மளிகைக்கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்பட்டு வருகிறது. இதனிடையே, 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் இன்றும், நாளையும் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும் திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

  அதேபோல், தற்போதுள்ள கட்டுப்பாடுகளின் படி, சலூன் கடைகள் திறப்பதற்கு அனுமதியில்லை. எனினும், தொடர்ந்து 14 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழகம் முழுவதும் இன்றும், நாளையும் இரு தினங்களுக்கு சலூன் கடைகள் இயங்கலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
  Published by:Esakki Raja
  First published: