பல்வேறு கட்டுப்பாடுகளை தளர்த்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், பள்ளிகள், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்டவையின் மீதான கட்டுப்பாடுகள் தொடரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மே 4 முதல் மூன்றாம் கட்ட ஊரடங்கு இரண்டு வாரங்களுக்கு நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூடியது. இதில், கொரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளில் ஊரடங்கு விதிகளை தளர்த்துவது மற்றும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை தமிழக அரசு சற்று முன்னர் வெளியிட்டது. இந்த அறிவிப்பில், ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பாக அரசின் முடிவுகள் தெரிவிக்கப்பட்டிருந்தன.
படிக்க: தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு - முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு
ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீழ்க்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும்வரை தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி,
- பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்கள்.
- வழிபாட்டுத் தலங்களில் பொது மக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள்.
- திரையரங்குகள், கேளிக்கைக்கூடங்கள், மதுக்கூடங்கள், உடற்பயிற்சிக்கூடங்கள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், நீச்சல் குளங்கள், விளையாட்டு அரங்குகள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் போன்ற இடங்கள்.
- அனைத்து வகையான சமய, சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்வுகள், விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள்.
- பொது மக்களுக்கான விமான, இரயில், பொது பேருந்து போக்குவரத்து.
- டாக்ஸி, ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷா.
- மெட்ரோ இரயில், மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து.
- மாநிலங்களுக்கு இடையேயான பொது மக்கள் போக்குவரத்து.
- தங்கும் விடுதிகள் (பணியாளர் விடுதிகள் தவிர), தங்கும் ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள்.
- இறுதி ஊர்வலங்களில் 20 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.
- திருமண நிகழ்ச்சிகள்
ஆகியவற்றுக்கு தற்போது உள்ள நடைமுறைகள் தொடரும்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன்
இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow
News18Tamil.com @
Facebook,
Twitter,
Instagram,
Sharechat,
Helo,
WhatsApp,
Telegram,
TikTok,
YouTube
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.