தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மே மாதம் 10-ம் தேதி முதல் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்போது தமிழக அரசு தளர்வுகள் அறிவித்துள்ளதை தொடர்ந்து சென்னை மெட்ரோ இரயில் சேவைகள் நாளை முதல் (21.06.21) தொடங்குகின்றன.
தமிழக அரசின் அறிவுறுத்தல்களின்படி
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் 50 சதவிகித இருக்கைகள் மட்டுமே பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மெட்ரோ ரயில் சேவைகள்:
மெட்ரோ ரயில் சேவைகள் தொடக்கத்தில் காலை 6.30 மணி முதல் இரவு 9 வரை இயக்கப்படும்.
நீலவழித்தடம்
விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையம் இடையே இயக்கப்படும்.
பச்சைவழித்தடம்
பரங்கிமலை மெட்ரோ மற்றும் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ இடையே நாளை திங்கள்கிழமை முதல் உச்சநேரங்களில் காலை 9 மணி முதல் காலை 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி வரை இரவு 7 மணி வரை 5 நிமிட இடைவெளியிலும் மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியிலும் ரயில்கள் இயக்கப்படும்.
Also Read: ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்.. உங்க ஊரில் என்ன இயங்கும்.. என்ன இயங்காது தெரியுமா..
பயணிகள் பாதுகாப்பிற்காக அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரயில்கள் அடிக்கடி கிருமிநாசனி மூலம் சுத்தம் செய்யப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மெட்ரோ ரயில் நிலைய நடைமேடைகளில் பயணிகளின் வருகை, வெளியேறுதல் மற்றும் தனிமனித இடைவெளியை கண்காணிப்பதற்காக தேவையான ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நடைமேடையில் காத்திருக்கும் போதும் ரயிலில் பயணிக்கும் போதும் பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருப்பதுடன் 6 அடிதூர இடைவெளியை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அனைத்து மெட்ரோ ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலைய நடைமேடைகளில் பயணிகள் பயன்படுத்தும் மற்றும் காத்திருக்கும் இடங்களில் தனிமனித இடைவெளி குறித்த X குறியீடுகள் வைக்கப்பட்டுள்ளன. பயணிகள் அனைவரும் இந்த குறியீடுகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்
சென்னை மெட்ரோ ரயிலில் பயணிகள் கட்டாயம் சரியாக முகக்கவசம் மற்றும் தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என அறிவுத்தப்படுகிறார்கள்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.