Home /News /tamil-nadu /

கல்லூரிகளுக்கு ஜனவரி 20ம் தேதிவரை விடுமுறை: தமிழக அரசு

கல்லூரிகளுக்கு ஜனவரி 20ம் தேதிவரை விடுமுறை: தமிழக அரசு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

பொதுத் தேர்வுக்குச் செல்லும் மாணவர் கல்வி மற்றும் எதிர்கால  நலன் மற்றும் தடுப்பூசி  செலுத்திக்கொள்ள ஏதுவாக 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன் ஒருபகுதியாக அரசு, தனியார் மருத்துவ மற்றும் துணை மருத்துவக் கல்லூரிகள் தவிர அனைத்துக் கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணாக்கர்கள் தேர்வு எழுதும் பொருட்டு ஜனவரி 20ஆம் தேதி வரை விடுப்பு  அளிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    ஓமைக்ரான் மற்றும் கொரோனா பரவல் அதிகரித்துவரும் சூழலில் முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, நாளை முதல் வார நாட்களில் இரவு ஊரடங்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்படவுள்ளது.

    இதன் ஒருபகுதியாக, அரசு, தனியார் மருத்துவ மற்றும் துணை மருத்துவக் கல்லூரிகள் தவிர அனைத்துக் கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணாக்கர்கள் தேர்வு எழுதும் பொருட்டு ஜனவரி 20ஆம் தேதி வரை விடுப்பு அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

    மேலும், மழலையர் காப்பகங்கள் (Creche) தவிர, மழலையர் விளையாட்டுப் பள்ளிகள் (Play Schools), நர்சரிப் பள்ளிகள் (LKG, UKG) செயல்பட அனுமதி இல்லை. அனைத்துப் பள்ளிகளிலும், 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்தத் தடை விதிக்கப்படுகிறது.

    இதையும் படிங்க: தமிழ்நாட்டில் இரவு ஊரடங்கு... பஸ் போக்குவரத்து இருக்குமா..?


    பொதுத் தேர்வுக்குச் செல்லும் மாணவர் கல்வி மற்றும் எதிர்கால  நலன் மற்றும் தடுப்பூசி  செலுத்திக்கொள்ள ஏதுவாக 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும். பயிற்சி நிலையங்கள் (Training and Coaching Centres) செயல்படத் தடை விதிக்கப்படுகிறது.பயிற்சி நிலையங்கள் (Training and Coaching Centres) செயல்படத் தடை விதிக்கப்படுகிறது.  பொருட்காட்சிகள் மற்றும் புத்தகக் கண்காட்சிகள் நடத்துவது தற்போது ஒத்திவைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் படிக்க: கொரோனா கட்டுபாடுகள்: TNPSC தேர்வுகள் தள்ளிப் போகிறது

    Published by:Murugesh M
    First published:

    Tags: College, Corona impact, Students, Tamilnadu government

    அடுத்த செய்தி