ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை - அமைச்சர் சி.வி.சண்முகம் உறுதி

ஏலம் விடப்பட்ட 55 இடங்களில் மூன்று இடங்கள் தமிழகத்தில் இருந்தன. அவற்றில் 2 இடங்களை வேதாந்தாவும், 1 இடத்தை ஓ.என்.ஜி.சி நிறுவனமும் பெற்றிருந்தது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை - அமைச்சர் சி.வி.சண்முகம் உறுதி
மாதிரிப் படம்
  • News18
  • Last Updated: July 3, 2019, 3:38 PM IST
  • Share this:
ஹைட்ரோ கார்பன் விவகாரத்தில் தமிழக அரசு இதுவரை எந்த திட்டத்திற்கும் அனுமதி அளிக்கவில்லை என்று அமைச்சர் சி.வி. சண்முகம் சட்டமன்றத்தில் பதிலளித்துள்ளார்.

ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான திறந்தவெளி அனுமதி கொள்கையின்கீழ் தமிழகத்தில் மேலும் 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான அனுமதியை இன்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது.

முன்னதாக, முதற்கட்ட ஏலத்தின்போது, இந்தியா முழுவதும் மொத்தமுள்ள 55 இடங்களில் 41 இடங்களில் வேதாந்தா நிறுவனம் ஏலம் எடுத்தது. மீதமுள்ள இடங்களில் ஓ.என்.ஜி.சி உள்ளிட்ட பிற நிறுவனங்கள் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி பெற்றன.


ஏலம் விடப்பட்ட 55 இடங்களில் மூன்று இடங்கள் தமிழகத்தில் இருந்தன. அவற்றில் 2 இடங்களை வேதாந்தாவும், 1 இடத்தை ஓ.என்.ஜி.சி நிறுவனமும் பெற்றிருந்தது.

இந்நிலையில் இதுகுறித்து சட்டமன்றத்தில் தி.மு.க சார்பில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அப்போது தி.மு.க சார்பில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி ராஜா,  “ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அளிக்கப்பட்ட அனுமதி மூலம் நிலத்திற்குள் உள்ள எந்த வளத்தையும் எடுத்துக்கொள்ளலாம் என பாலிசியில் உள்ளது

பூமிக்கு அடியில் 5 கி.மீ வரை துளையிடப்படுகிறது. ரசாயன தண்ணீர் செலுத்தப்பட்டு பூமிக்கு அடியில் உள்ள படிம கற்கள் உடைக்கப்படுகிறது.பக்கத்து மாநிலமான கேரளாவை போல் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக டெல்டா மாவட்டங்களை அறிவிக்க வேண்டும்” என்று கூறினார்.

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், “ஹைட்ரோ கார்பான் விவகாரத்தில் தமிழக அரசு இதுவரை எந்த திட்டத்திற்கும் அனுமதி அளிக்கவில்லை. இனிமேலும் அனுமதி அளிக்காது.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு அனுமதி அளித்தாலும், மாநில அரசு தனது உரிமையை எந்த காலத்திலும் விட்டுக் கொடுக்காது. எந்த காலத்திலும் இந்த திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி அளிக்காது. ஹைட்ரோ கார்பன் விவசாயிகளின் வாழ்வாதார பிரச்னை. அதற்கு அனுமதி வழங்கக் கூடாது. அது நீங்களாக இருந்தாலும் சரி, நாங்களாக இருந்தாலும் சரி.

தமிழக அரசுக்கு ஹைட்ரோ கார்பன் திட்டம் கொண்டு வருவதில் உடன்பாடு இல்லை. பின்னர் ஏன் மனித சங்கிலி போராட்டம்? தற்போது வரை  மாநில அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துகிறார்கள். ஏதோ திட்டம் தொடங்கப்பட்டு விட்டது போல மாய தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அது தவறு” என்று ஆவேசமாக பதிலளித்தார்
First published: July 3, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading