சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ட்ரான்ஸ்பர்!

வருவாய் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

கோவை, திருச்சி, புதுக்கோட்டை, திருவாரூர் ஆகிய மாவட்ட ஆட்சியர்களும் மாற்றப்பட்டுள்ளனர்.

  • Last Updated :
  • Share this:
சுகாதாரத்துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் ஏழு ஆண்டுகளுக்கு பின் மாற்றப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் சுகாதாரத்துறை செயலாளர் பொறுப்பில் இருந்த ராதாகிருஷ்ணன், போக்குவரத்துத்துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித்துறை ஆணையராக இருந்த டாக்டர் பீலா ராஜேஷ் சுகாதாரத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

7 ஆண்டுகளாக சுகாதாரத்துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் மீது, ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைச்சர்களும், அதிமுக எம்பிகளும் புகார் கூறியிருந்த நிலையில் அவர் மாற்றப்பட்டுள்ளார்.

அதேபோல், பதிவுத்துறை ஐஜியாக இருந்த குமரகுருபரன், வருவாய் நிர்வாகத்துறை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். குமரகுருபரன் கவனித்துவந்த பதிவு துறையை வணிகத்துறை செயலர் பாலச்சந்திரன் கூடுதலாக கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை, திருச்சி, புதுக்கோட்டை, திருவாரூர் ஆகிய மாவட்ட ஆட்சியர்களும் மாற்றப்பட்டுள்ளனர். திருவாரூர் ஆட்சியர் நிர்மல்ராஜ் தமிழ்நாடு குடிநீர் வாரிய நிர்வாக இயக்குநராகவும், கோவை ஆட்சியர் ஹரிஹரன் நகர நிர்வாக குடிநீர் வழங்கல்துறை செயலராகவும் மாற்றப்பட்டுள்ளார்.

திருச்சி ஆட்சியராக சிவ அரசுவும், புதுக்கோட்டை ஆட்சியராக உமா மகேஸ்வரியும் நியமிக்கப்பட்டுள்ளனர். கோவை ஆட்சியராக ராஜாமணி, திருவாரூர் ஆட்சியராக டி.ஆனந்த்தும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மாநாகராட்சி ஆணையர் கார்த்திகேயன் நகராட்சி நிர்வாக ஆணையராகவும்,  நகராட்சி நிர்வாக ஆணையராக இருந்த பிரகாஷ், சென்னை மாநகராட்சி ஆணையராகவும் மாற்றப்பட்டுள்ளனர். கோவை மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் தமிழ்நாடு நகர ஆய்வுமைய இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.

Published by:Yuvaraj V
First published: