முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழகத்தில் 3,172 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் 3,172 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மா. சுப்பிரமணியன்

மா. சுப்பிரமணியன்

2021ம் ஆண்டு 6,039 பேருக்கு டெங்கு பாதிப்பு இருந்தது. 2022ம் ஆண்டு ஜூன் வரை 3,172 பேருக்கு மட்டுமே டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழகத்தின் 33 வது மெகா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் மயிலாப்பூரில் உள்ள சமூக நலக் கூடத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், தமிழகத்தில் 96% பேர் முதல் தவணை தடுப்பூசியும், 88.6% பேர் இரண்டாவது தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர். இன்னும், 92. 45 லட்சம் பேர் இரண்டாம் தவணை செலுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. முதல் தவணை, இரண்டாம் தவணை, பூஸ்டர் டோஸ் என எல்லாம் சேர்த்து 4.78 கோடி டோஸ் தமிழகத்தில் இன்னும் செலுத்த வேண்டியுள்ளது” என கூறினார்.

மேலும், “மழைக்காலத்தில் ஏற்படும் பாதிப்புகள், நோய்கள் ஆகியவற்றை கையாள்வது குறித்து விவாதிக்க, வருகிற 11ம் தேதி அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்கள், மருத்துவக் கல்லூரி முதல்வர்கள், மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சி செயல் இயக்குநர்கள், உள்ளாட்சித்துறை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் ஆகியோருடன் ஆலோசனை கூட்டம் நடைபெறவிருக்கிறது” என குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், “காவிரி, பவானி ஆற்றின் கரையோரங்களில் எங்கெல்லம் பாதிப்புகள் இருக்கிறதோ, அந்த இடங்களில் மழைக்கால சிறப்பு முகாம்கள் நடைபெறும்” என குறிப்பிட்டார். மேலும், “சினைமுட்டை விவகாரத்தில் அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இது வருத்தத்துக்கு உரியதாகும்” என கூறினார்.

மேலும், “டெங்கு பாதிப்பு 2021 ம் ஆண்டு 6.039 பேருக்கு டெங்கு பாதிப்பு இருந்தது. 2022ம் ஆண்டு ஜூன் வரை 3,172 பேருக்கு மட்டுமே டெங்கு பாதிக்கப்பட்டுள்ளது. டெங்கு ஒழிப்பு மற்றும் கொசு ஒழிப்பு பணியில் சுகாதாரத்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதனடிப்படையில், 18,643 பேர் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 1,13,653 மாதிரிகள்  டெங்கு பரிசோதனைக்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது. 15,853 கொசு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. தேவையான மருந்துகளும் கையிருப்பில் உள்ளது” என கூறினார்.

மேலும், “கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது என்பது மகிழ்ச்சி அளிக்கும், அதே நேரம் பரிசோதனைகளை குறைக்கவில்லை” என குறிப்பிட்டார்.

First published:

Tags: Dengue, Health and welfare department, Ma subramanian