இந்தியாவில் சிலிண்டர் வெடிப்பு விபத்து உயிரிழப்புகளில் முதலிடத்தில் தமிழகம்.. எல்லோருக்குமான அறிவுறுத்தல் என்ன?

அடுப்பையும், சிலின்டரையும் இணைக்கும் குழாய் வெளி தோற்றத்தில் இருந்து நல்ல முறையில் இருப்பது போல் காட்சியளித்தாலும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டாயம் அதனை மாற்ற வேண்டும் என்கின்றனர்.

இந்தியாவில் சிலிண்டர் வெடிப்பு விபத்து உயிரிழப்புகளில் முதலிடத்தில் தமிழகம்.. எல்லோருக்குமான அறிவுறுத்தல் என்ன?
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: September 16, 2020, 2:09 PM IST
  • Share this:
இந்தியாவில் 2019-ம் ஆண்டு சமையல் எரிவாயு சிலின்டர் வெடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

ஆண்டுதோறும் இந்தியாவில் ஏற்படும் விபத்து (ம) தற்கொலைகளால் ஏற்படும் மரணங்கள் குறித்து தேசிய குற்ற ஆவணகாப்பகம் அறிக்கை வெளியிட்டு வருகிறது. அதன் படி கடந்த 2019 ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்து குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்  சமயல் ஏரிவாயு சிலின்டர் வெடித்து விபத்து ஏற்பட்டு உயிரிழந்தவர்களின் பட்டியலில் இந்தியாவில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு சமையல் எரிவாயு சிலின்டர் வெடித்து விபத்து ஏற்பட்டத்தில் தமிழகத்தில் 346 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.  அதிலும் பெண்கள் அதிக எண்ணிக்கையில் உயிரிழந்திருக்கிறார்கள் 346 பேரில் 96 பேர் ஆண்களும் 250 பேர் பெண்கள் என்பதும் குறிப்பிடதக்கது.


தமிழகத்திற்கு அடுத்தபடியாக கர்நாடகம் இரண்டாம் இடத்தில் உள்ளது அங்கு கடந்த ஆண்டு ஏற்பட்ட சமையல் ஏரிவாயு சிலின்டர் விபத்தில் 286 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். கர்நாடகாவை தொடர்ந்து மகாராஷ்டிரா மூன்றாம் இடத்தில் உள்ளது அம்மாநிலத்தில் 285 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

சிலின்டர் எரிவாயு விபத்துக்களை தடுக்க அரசு (ம) தனியார் அமைப்புகள் பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் தமிழகத்தில் விபத்துக்களுத் அதனால் ஏற்படும் உயிரிழப்புக்களும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.

சிலின்டர் வெடி விபத்தில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ள செய்ய வேண்டியவை என்ன? என்பது குறித்து  நம்மிடம் பேசிய விபத்து தடுப்பு நிபுணர் பிரபு காந்தி சிலிண்டர் சீல் பினரித்திருந்தால் அதை பொதுமக்கள் வாங்க வேண்டாம் என தெரிவித்துள்ளார்.மேலும் சீல் பிரித்த பிறகு அதில் வாசர் சரியாக உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும் சமையல் எரிவாயு உருளை மூன்று பிரிவுகளைக் கொண்டது. தலைப்பகுதி, நடுப்பகுதி, கடைசிபகுதி. இந்த மூன்று பகுதிகளிலும் இணைப்பு இருக்கக்கூடிய இடத்தில் எரிவாயு கசிய வாய்ப்பு உள்ளது. எனவே சிலிண்டர் கொண்டு வந்தவுடன் சோப்பு நுரை தண்ணீரை மேலே தெளத்து பரிசோதிக்க வேண்டும்.

ஒருவேளை எரிவாயு கசிவு இருப்பின் சோப்பு நுரை அதிகமாக வரும் அதன் மூலம் கசிவு இருக்கிறதா என்பதை உணர முடியும். அதேபோல் கசிவு இருப்பின் உடனடியாக அவசர உதவி எண்ணை அழைத்து சரி பார்க்க வேண்டும். சமையல் எரிவாயு உருளை மற்றும் அடுப்பை இணைக்கும் குழாய் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்.

எரிவாயு சிலின்டர் விபத்திற்கு முக்கிய காரணம் அதனை கையாளும் முறை என தெரிவிக்கும் பிரபு காந்தி. எரிவாயு சிலின்டர் முழுமையாக சோதனை செய்யபட்டிருப்பதை மக்களும் அறிந்துக்கொள்ள மாதத்திற்கு ஒரு வண்ணம் வீதம் சிலின்டரில் அடையாளமிட்டு காட்ட வேண்டும் என கூறுகிறார்.

Also read... இருமொழிக்கொள்கை குறித்து பேசும் எதிர்க்கட்சிகள் உலகத் தமிழ் மாநாட்டை நடத்தாதது ஏன்? அமைச்சர் விஜயபாஸ்கர் கேள்வி..சமையல் எரிவாயு சிலின்டர் மற்றும் அடுப்பு ஒரே சீரான உயரத்தில் வைக்க கூடாது என தெரிவிக்கும் நிபுணர்கள் சிலின்டர் வைக்கப்பட்ட இடத்தில் இருந்து குறைந்தது 2 அடி உயரத்தில் அடுப்பை வைக்க வேண்டும் என கூறுகின்றனர்.

அடுப்பையும், சிலின்டரையும் இணைக்கும் குழாய் வெளி தோற்றத்தில் இருந்து நல்ல முறையில் இருப்பது போல் காட்சியளித்தாலும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டாயம் அதனை மாற்ற வேண்டும் என்கின்றனர்.

வாயு கசிவு ஏற்படுகிறது என சந்தேகம் எழுந்தால் உடனடியாக வீட்டில் இருக்கும் ஜன்னல் கதவுகளை திறக்க வேண்டும் என தெரிவிக்கும் நிபுணர்கள்... சிலின்டர் பயன்பாட்டில் கூடுதல் கவனம் செலுத்தி விபத்தை தவிர்க்க வேண்டும் என வலியுருத்துகின்றனர்.
First published: September 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading