மின்வெட்டை ஏற்படுத்தி அதிமுகவினர் பணப்பட்டுவாடா - தமிழச்சி குற்றசாட்டு!

மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், பணத்தை ஏற்றுக்கொண்டு ஏமாந்தால் மின்வெட்டை போலவே தமிழகமும் நிரந்தரமாக இருளில் மூழ்கும் நிலை ஏற்பட்டு விடும் எனவும் தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்தார்.

news18
Updated: April 15, 2019, 10:52 AM IST
மின்வெட்டை ஏற்படுத்தி அதிமுகவினர் பணப்பட்டுவாடா - தமிழச்சி குற்றசாட்டு!
தமிழச்சி தங்க பாண்டியன்
news18
Updated: April 15, 2019, 10:52 AM IST
தமிழகம் முழுவதுன் நேற்று இரவு செயற்கையான மின்வெட்டை ஏற்படுத்தி அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்ததாக தமிழச்சி தங்கபாண்டியன் குற்றம் சாட்டினார்.

39 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற 18-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், இறுதிகட்ட தேர்தல் பிரச்சாரத்தில் வேட்பாளர்கள் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் களம் காணும் கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம், மேட்டுப்பாளையம் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் வாக்கு சேகரித்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகம் முழுவதும் எங்கு சென்றாலும் மக்கள் திமுகவிற்கு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். தென் சென்னை தொகுதியை பொருத்த வரை மிக அதிகபடியான வாக்குகள் வித்யாசத்தில் நான் வெற்றி பெறுவேன் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆட்சியை கையில் வைத்துக்கொண்டு ஆளும் கட்சியான அதிமுக அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி நேற்று இரவு தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் செயற்கையான மின்வெட்டை ஏற்படுத்தி திட்டமிட்டு பணப்பட்டுவாடா செய்து வருகின்றனர்.

மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், இதை ஏற்றுக்கொண்டு ஏமாந்தால் மின்வெட்டை போலவே தமிழகமும் நிரந்தரமாக இருளில் மூழ்கும் நிலை ஏற்பட்டு விடும் எனவும் தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்தார்.

அதிமுகவின் மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளதாக தெரிவித்த தமிழச்சி தங்கபாண்டியன் குறிப்பாக நீட் தேர்வினால் ஏற்படும் பிரச்சினைகளை இளைஞர்கள் தங்கள் மனதில் வைத்துக்கொண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த விரும்புகின்றனர் என்றும் தெரிவித்தனர்.

Also see...


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...