Home » News » Tamil-nadu » TN GRADUATE TEACHERS ASSOCIATION HAS URGED THE GOVT TO DECLARE SATURDAY AS A HOLIDAY FOR THE DAY BEFORE DIWALI VIN

தீபாவளிக்கு முந்தைய நாள் சனிக்கிழமை விடுமுறை வேண்டும்: ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்!

தீபாவளிக்கு முந்தைய நாளான சனிக்கிழமை வேலை நாளாக இருந்தால் மாணவர் வருகையும் குறைவாகவே இருக்கும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தீபாவளிக்கு முந்தைய நாள் சனிக்கிழமை விடுமுறை வேண்டும்: ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்!
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: October 8, 2019, 11:11 AM IST
  • Share this:
தீபாவளிக்கு முந்தைய நாளான சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை நாளாக அரசு அறிவிக்க வேண்டுமென தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

தீபாவளி பண்டிகை ஒருநாள் தான் என்றாலும், அதற்கான ஏற்பாடுகள், சந்திப்புகள் என 2 ,3 நாட்களுக்கு கொண்டாட்டங்கள் நீடித்திருக்கும்.

இந்த ஆண்டு இம்மாதம் 27-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று தீபாவளி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளிக்கு முந்தைய நாளும் பிந்தைய நாளும், வேலை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு தீபாவளிக்கு ஏறக்குறைய 5 நாட்கள் விடுமுறை விடப்பட்ட நிலையில், இந்த ஆண்டு விடுமுறை இல்லாத ஒரு சூழலை பள்ளிக்கல்வித்துறை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளிக்கு முந்தைய நாளான சனிக்கிழமை வேலை நாளாக இருந்தால் மாணவர் வருகையும் குறைவாகவே இருக்கும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Also see...
First published: October 8, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading