• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சிலம்பம் எங்கு தோன்றியது என ஆய்வு செய்ய குழு - விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தகவல்!

சிலம்பம் எங்கு தோன்றியது என ஆய்வு செய்ய குழு - விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தகவல்!

silambam

silambam

வட சென்னையில் சிலம்ப விளையாட்டிற்கென பிரத்யேக ஸ்டேடியம் அமைக்கபடும்

  • Share this:
    தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்ப கலை தமிழ்நாட்டில் எங்கு தோன்றியது என ஆய்வு செய்ய விரைவில் குழு அமைக்கபடுமென விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் கூறியுள்ளார்.

    சென்னை ராயபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் சிலம்ப விளையாட்டை மத்திய அரசின் கேலோ இந்தியா திட்டத்தில் இணைக்க தமிழக அரசு முழு முனைப்பு காட்டியதற்க்கு சிலம்ப வீரர்கள் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது, இந்த விழாவில் சிறு குழந்தைகள் பள்ளி மாணவர்கள் சிலம்ப கலை வீரர்கள் என அனைவரும் சிலம்பம் சுழற்றியும், தீ உள்ளே நுழைந்தும், பல்வேறு வகையில் உள்ள சிலம்ப கலையை செய்து கான்பித்தனர்,

    இதில் கலந்துகொண்ட விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தமிழர்களின் தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பத்தை தமிழக அரசு உலகறிய செய்யும் என்றும் தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்ப கலை தமிழ் நாட்டில் எங்கு தோன்றியது, எப்படி தோன்றியது என ஆய்வு செய்ய விரைவில் உயர் அதிகாரிகள் குழு அமைக்கபடுமென அறிவித்தார்.

    Also Read:  சிகிச்சைக்கு சென்ற பெண்ணின் ட்ரவுசரை கழட்டி அத்துமீறிய மருத்துவருக்கு தர்ம அடி!

    மேலும், சிலம்ப விளையாட்டு வீரர்களுக்கு தமிழக அரசு வேலையில் 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கபட்டிருப்பதாகவும், பள்ளிகளில் சிலம்ப விளையாட்டை கற்று கொடுக்க நடவடிக்கைகள் எடுப்பதோடு வட சென்னையில் சிலம்ப விளையாட்டிற்கென பிரத்யேக ஸ்டேடியம் அமைக்கபடும் என் உறுதியளித்தார்.

    ஒலிம்பிக் விளையாட்டில் இடம்பெற்றுள்ள கார்ஃப்பால் விளையாட்டை இந்திய அரசு அங்கீகரித்துள்ளது அதேபோல் தமிழக அரசும் அதை ஆய்வு செய்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்காடுமென அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Arun
    First published: