மீத்தேன், ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட திட்டங்களை ஒருபோதும் தமிழக அரசு அனுமதிக்காது: அமைச்சர் தங்கம் தென்னரசு

தங்கம் தென்னரசு

ஒன்ஜிசி அறியலூரில் 10 எண்ணெய் கிணறுகளும், கடலூரில் 5ம் அமைக்க விண்ணப்பித்தனர், அதனை ஜூன் 21-ம் தேதியன்றே நிராகரித்துவிட்டோம்.

 • Share this:
  மீத்தேன், ஷேல்கேஸ், ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட மக்கள் எதிர்ப்பு திட்டங்களை தமிழக அரசு ஒரு போதும் அனுமதிக்காது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

  ஆளுநர் உரையின் விவாதத்தின் போது மனித நேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களுக்கு அரசு அனுமதி அளிக்கக்கூடாது என வலியுறுத்தினார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதற்கு பதிலளித்த தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஹைட்ரோகார்பன் புதிய ஆய்வுக்காக மாநில சுற்றுச்சூழல் குழுவிடம் ஓஎன்ஜிசி விண்ணப்பித்தது. தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர், அறந்தாங்கி ஆகிய பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி இல்லை எனவும் இந்த மாவட்டத்திற்கு வெளியே எண்ணெய் உற்பத்தி எடுக்க விண்ணப்பித்தால், அதன் பாதிப்புகளை கண்டறிய வல்லுநர் குழு அமைக்கப்படும். அந்த குழு பொது மக்களின் கருத்துகளை கேட்டு அரசுக்கு அறிக்கை அளிக்கும்.

  ஒன்ஜிசி அறியலூரில் 10 எண்ணெய் கிணறுகளும், கடலூரில் 5ம் அமைக்க விண்ணப்பித்தனர், அதனை ஜூன் 21-ம் தேதியன்றே நிராகரித்துவிட்டோம். தமிழகத்தில் மீத்தேன், ஷேல் கேஸ் எடுக்க அனுமதி அளிக்கப்பட மாட்டாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
  Published by:Esakki Raja
  First published: