ஸ்டெர்லைட் ஆலை திறப்பு விவகாரத்தில் மேல்முறையீடு - தமிழக முதல்வர்

ஸ்டெர்லைட் ஆலை

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு பசுமை தீர்ப்பாயம் இன்று அனுமதியளித்துள்ளது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  ஸ்டெர்லைட் ஆலையை திறக்க பசுமை தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

  தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி தொடர்ந்து 100 நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் 100-வது நாளான மே 22-ம் தேதி நடைபெற்ற பேரணியின்போது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் உயிரிழந்தனர்.

  தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. பின்னர், அந்த ஆலை மூடப்பட்டது. இதை எதிர்த்து ஆலை நிர்வாகம் சார்பில் பசுமை தீர்ப்பாயத்தில் முறையிடப்பட்டது.

  ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு பசுமை தீர்ப்பாயம் இன்று அனுமதியளித்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஆலையை திறக்க பசுமை தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் என்றார்.

  இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறுகையில், 'மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் மக்களுக்கு ஆதரவாகவே அரசு செயல்படும்' என்றார்.

  போராட்டம் ஓயாது: பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பு குறித்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டகுழு ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், 'ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும். போராட்டக் குழு சார்பில் நீதிமன்றத்தை நாட உள்ளோம். ஸ்டெர்லைட் ஆலைக்கு நிரந்தர தடை விதிக்கும்வரை எங்களது போராட்டம் ஓயாது’ என்றார்.

  Also watch

  Published by:DS Gopinath
  First published: