பொங்கல் பண்டிகைக்காக 24,708 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் – அமைச்சர் தகவல்

தமிழகம் முழுவதும் 24,708 சிறப்புப் பேருந்துகளும், சென்னையிலிருந்து மட்டும் 14,263 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகைக்காக 24,708 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் – அமைச்சர் தகவல்
மாதிரிப் படம்
  • News18
  • Last Updated: January 7, 2020, 10:08 AM IST
  • Share this:
பொங்கல் பண்டிகைக்காக தமிழகம் முழுவதும் 24,708 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

பொங்கல் சிறப்பு பேருந்துகள் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்துத் துறை அதிகாரிகளுடன் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடப்பாண்டில் 6 லட்சம் மக்கள் சொந்த ஊருக்கு பயணிப்பார்கள் என எதிர்ப்பார்ப்பதாகவும், இதையொட்டி அடுத்த மாதம் 11,12,13,14 ஆகிய 4 நாட்கள் சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


இதில் தமிழகம் முழுவதும் 24,708 சிறப்புப் பேருந்துகளும், சென்னையிலிருந்து மட்டும் 14,263 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதாக அவர் கூறினார்.

இதற்கான சிறப்பு கவுன்டர்கள் வரும் 9-ம் தேதி திறக்கப்பட உள்ளதாகவும் கோயம்பேடு, மாதவரம், தாம்பரம் மெப்ஸ், கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், பண்டிகை முடிந்து திரும்புவதற்கான பேருந்துகள் குறித்து வரும் 2-ம் தேதி ஆய்வுக்கூட்டம் நடத்தி முடிவு செய்யப்படும் என்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.Also watch

First published: December 27, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading