Home /News /tamil-nadu /

ஆன்லைன் ரம்மியை தடை செய்ய அவசர சட்டம் - அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை

ஆன்லைன் ரம்மியை தடை செய்ய அவசர சட்டம் - அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை

கோப்பு காட்சி

கோப்பு காட்சி

தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் இரண்டு முக்கிய விசாரணை ஆணையங்களின் அறிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
    தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணைதள சூதாட்டங்களை தடை செய்ய அவரச சட்டம் கொண்டு வருவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி மற்றும் அது போன்ற ஆன்லைன் விளையாட்டுகளால் சமீபத்தில் அதிக தற்கொலை சம்பவங்கள் அரங்கேறி வந்தன. இந்நிலையில் உயிர்கொல்லியாக திகழும் இந்த ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் என அதிமுக, விசிக, பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தன. இதனையடுத்து ஆன்லைன் சூதாட்டத்தை சட்டப்பூர்வமாக தடை செய்வதற்கான முயற்சிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.

    இந்நிலையில், தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் இரண்டு முக்கிய விசாரணை ஆணையங்களின் அறிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அதில் ஒன்று தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூடு தொடர்பாக நீதியரசர் அருணா ஜெகதீசன் நடத்திய விசாரணை ஆணையத்தின் அறிக்கை ஆகும். இதில் ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 17 காவல்துறையினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட 4 அலுவலர்கள் மீது தேவையான துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    உரிய நடவடிக்கை எடுக்கப்பட்ட பின்னர் அதற்கான விபர அறிக்கை மற்றும் ஆணையத்தின் இறுதி அறிக்கை தமிழ்நாடு சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. இரண்டாவதாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக நடத்தப்பட்ட ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணைத்தின் அறிக்கை விவாதிக்கப்பட்டது.

    அந்த அறிக்கையில் விகே சசிகலா, மருத்துவர் சிவகுமார், சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் தலைமை செயலாளர் டாக்டர் ராம் மோகன் மீது விசாரணை நடத்த வேண்டும் என ஆணையம் பரிந்துரை செய்திருந்தது. அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதேபோல்,  தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணைதள சூதாட்டங்களை தடை செய்ய அவரச சட்டம் வகுப்பது தொடர்பாகவும் அதில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: CM MK Stalin, Online rummy, Tamilnadu government

    அடுத்த செய்தி