அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டில் திருநங்கைகளும் விண்ணப்பிக்கலாம்!


Updated: June 14, 2019, 6:27 PM IST
அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டில் திருநங்கைகளும் விண்ணப்பிக்கலாம்!
ஒப்பந்த செவிலியர்களுக்கான ஊதியத்தை சரியான தேதியில் வழங்க வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம்

Updated: June 14, 2019, 6:27 PM IST
அரசு வேலைவாய்ப்புகளில், பெண்களுக்கான 30 சதவீத இடஒதுக்கீட்டில் திருநங்கைகளும் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி திருநங்கை, திருநம்பி ஆகிய மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி பிரிவாக பிரித்து, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க உத்தரவிடக் கோரி சென்னை அமைந்தக்கரையைச் சேர்ந்த கிரேஸ் பானு கணேசன் என்ற திருநங்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில், தமிழக சமூக நலத்துறை ஆணையர் அமுதவள்ளி அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ‘‘மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி நல வாரியம் துவங்கப்பட்டு, அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு வீட்டு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்க 1.20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

சாதிச் சான்று இல்லாத மூன்றாம் பாலினத்தவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களாகக் கருதி இடஒதுக்கீடு வழங்க 2017-ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கான 30 சதவீத இடஒதுக்கீட்டில் திருநங்கைகள் விண்ணப்பிக்கும் வகையில் 2015-ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இடஒதுக்கீட்டுச் சலுகையை வழங்கும் வகையில், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்ய வகை செய்யும் வகையிலும் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது’’ என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது..

இந்த அறிக்கையை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு, வழக்கின் விசாரணையை ஜூலை 17-க்கு தள்ளிவைத்தது.
Loading...
மேலும் பார்க்க...

‘தளபதி 64’ படத்தின் புதிய அப்டேட்!

First published: June 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...