Home /News /tamil-nadu /

இலங்கையில் உள்ள மலையக தமிழர்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கு தமிழக அரசு உதவ வேண்டும்: இலங்கை பிரதமரின் செயலாளர் கோரிக்கை

இலங்கையில் உள்ள மலையக தமிழர்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கு தமிழக அரசு உதவ வேண்டும்: இலங்கை பிரதமரின் செயலாளர் கோரிக்கை

கச்சத்தீவு ஒப்பந்தம் செய்யப்பட்ட பின்னரே இலங்கை மற்றும் தமிழக மீனவர்களிடையே ஒரு மோதல் போக்கு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்

கச்சத்தீவு ஒப்பந்தம் செய்யப்பட்ட பின்னரே இலங்கை மற்றும் தமிழக மீனவர்களிடையே ஒரு மோதல் போக்கு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்

கச்சத்தீவு ஒப்பந்தம் செய்யப்பட்ட பின்னரே இலங்கை மற்றும் தமிழக மீனவர்களிடையே ஒரு மோதல் போக்கு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்

    இலங்கை மற்றும் தமிழக மீனவர்கள் இருக்கக்கூடிய பிரச்சினைகளை தீர்வுகாண கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறு சீரமைப்பு செய்ய வேண்டும் என இலங்கை பிரதமரின் செயலாளர் அமைச்சர்கள் தமிழக முதலமைச்சரிடம் நேரில் வலியுறுத்தினர்.

    இலங்கையில் உள்ள மலையகத் தமிழர்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கும் இலங்கை மற்றும் தமிழக மீனவர்கள் இடையே இருக்கக்கூடிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து இலங்கையைச் சேர்ந்த அமைச்சர்கள் பிரதமர் இணைச் செயலாளர் ஆகியோர் நேரில் வலியுறுத்தினர்.

    சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் துணைத் தலைவரும் பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான இலங்கை பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொதுச்செயலாளரும், இலங்கை சமூக உட்கட்டமைப்பு துறையின் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் முதலமைச்சர் ஸ்டாலினுடன் சந்தித்து பேசினர்.

    தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், இலங்கைத் தமிழர் நலன், மீனவர்கள் விவகாரம் உள்ளிட்டவை குறித்து பேசினர்.

    சந்திப்பு குறித்து இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டைமான், இலங்கை பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டைமான் செய்தியாளர்களை சந்தித்தனர்.

    உலகத் தாய்மொழித் தினம்: தமிழ் மொழிக்கு வாழ்த்து தெரிவித்த சீன பல்கலைக்கழக மாணவர்கள்!

    முதலாவதாக பேசிய இலங்கையின் சமூக உட்கட்டமைப்பு அமைச்சரான ஜீவன் தொண்டைமான், இலங்கையிலுள்ள மலையக தமிழர்கள் கல்வி, வாழ்க்கை மேம்பாட்டிற்கு பல்கலைக்கழகம் அமைக்க தரக் கோரியும் மேலும் தமிழர்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடிய வகையில் தமிழக முதலமைச்சரிடம் நேரில் வலியுறுத்தியதாக தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய பிரதமரின் இணைச்செயலாளர் செந்தில் தொண்டைமான், இலங்கையிலுள்ள மீனவர்களுக்கும் தமிழகத்தில் உள்ள மீனவர்களுக்கும் இடையே ஒரு சுமுகமான உறவை ஏற்படுத்த கூடிய வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியதாகவும் இது தொடர்பாக கச்சத்தீவு ஒப்பந்தத்தை சில மாற்றங்களை கொண்டு வந்து அதனை மறு ஆய்வு செய்ய வேண்டும் என அறிவித்துள்ளதாகவும் அதற்கு தமிழக முதலமைச்சர் பரிசீலனை செய்வதாக வாக்குறுதி அளித்தார்.

    கச்சத்தீவு ஒப்பந்தம் செய்யப்பட்ட பின்னரே இலங்கை மற்றும் தமிழக மீனவர்களிடையே ஒரு மோதல் போக்கு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்

    இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்வதில் தாங்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதாகவும் அதேநேரத்தில் தமிழக சிறைகளில் இருக்கக்கூடிய இலங்கை மீனவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டுமென வலியுறுத்தியதாகவும் சுமார் ஆறு மாதத்திற்கும் அதிகமாக அவர்கள் தமிழக சிறைகளில் இருந்து வருவதாகவும் தெரிவித்தார்.

    இலங்கை சிறையில் வாட கூடிய தமிழக மீனவர்களின் குடும்பத்திற்கு வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டுள்ள நிலையில் அதற்கு தமிழக அரசு உதவ வேண்டும் என தமிழக மீனவர்கள் சிறையில் சந்தித்த போது அவர்கள் இந்தக் கோரிக்கையை வைத்ததாகவும் தெரிவித்தார்

    இலங்கை தமிழர்கள் தொடர்ந்து அங்கு பாதிக்கப்பட்டு வருவதாகவும் தமிழக தலைவர்கள் பேசி வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்கள் கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற போரின் போது அவ்வாறு தமிழர்கள் பாதிக்கப் பட்டவர்கள் என்றும் தற்போது தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் ஏதும் இல்லை எனவும் அரசியல் உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களும் தமிழர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்

    இலங்கையில் உதவக்கூடிய வகையில் இந்திய அரசு பல்வேறு தொழில் நடவடிக்களை அங்கு மேற்கொண்டு வருவதாகவும் வரும் காலங்களில் இலங்கையில் உற்பத்தியை பெருக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அந்த நாட்டு அரசு மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்
    Published by:Esakki Raja
    First published:

    Tags: MK Stalin

    அடுத்த செய்தி