சுபஸ்ரீ குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை; 1 கோடி இழப்பீடு வழங்குக: திருமாவளவன் கோரிக்கை

சுபஸ்ரீ குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை; 1 கோடி இழப்பீடு வழங்குக: திருமாவளவன் கோரிக்கை
சுபஸ்ரீ குடும்பத்தினருக்கு திருமாவளவன் எம்பி ஆறுதல்
  • News18 Tamil
  • Last Updated: September 16, 2019, 7:08 PM IST
  • Share this:
சுபஸ்ரீ குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, 1 கோடி இழப்பீட்டை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையை அடுத்த குரோம்பேட்டை பவானிநகரில் பேனர் விழுந்த விபத்தில் பலியான பெண் என்ஜினியர் சுபஸ்ரீ-ன் தந்தை ரவி, தாயார் கீதா ஆகியோரை சந்தித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்பி ஆறுதல் கூறினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘‘ ஒரே மகளை இழந்த சுபஸ்ரீ-ன் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தேன். சுபஸ்ரீ குடும்பத்திற்கு 1 கோடி இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்.


பலியான சுபஸ்ரீ குடும்பத்தினருக்கு அரசு தரப்பில் ஆறுதல் கூட தெரிவிக்காதது வருத்தத்திற்குரியது. பேனர் விழுந்து விபத்து ஏற்படவில்லை என ஆளும் தரப்பினர் விவாதங்களில் கூறுவது, வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதை போல உள்ளது. பேனர் குறித்து உரிய சட்டம் கொண்டு வந்தால் தான் காவல்துறையினர் அதை வழிநடத்த முடியும்’’ என்றார்.

 

First published: September 16, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading