தீபாவளி சிறப்புப் பேருந்துகளுக்காக 30 முன்பதிவு மையங்கள்! இன்று முதல் தொடக்கம்

கோயம்பேடு பேருந்துநிலையத்தில் 26 முன்பதிவு மையங்கள்,தாம்பரம் சானடோரியத்தில் 2, மாதவரம், பூந்தமல்லியில் தலா ஒரு முன்பதிவு மையங்கள்  என 30 மையங்கள் இன்று முதல் இயங்குகின்றன.

தீபாவளி சிறப்புப் பேருந்துகளுக்காக 30 முன்பதிவு மையங்கள்! இன்று முதல் தொடக்கம்
கோப்பு படம்
  • News18
  • Last Updated: October 24, 2019, 10:09 AM IST
  • Share this:
தீபாவளிக்கு மக்கள் தங்கள் சொந்த ஊர் செல்ல சிறப்புப் பேருந்துகள் இயக்கம் இன்றிலிருந்து தொடங்கப்படுகிறது.

சென்னையில் இருந்து மட்டும் 10,940 பேருந்துகள் மற்ற ஊர்களுக்கு இயக்கப்பட உள்ளன. இதேபோல் 3 நாட்களுக்கு மொத்தம் 8,310 சிறப்பு பேருந்துகள் வெளியூர்களில் இருந்து இயக்கப்படுகின்றன.

கோயம்பேடு பேருந்துநிலையத்தில் 26 முன்பதிவு மையங்கள், தாம்பரம் சானடோரியத்தில் 2, மாதவரம், பூந்தமல்லியில் தலா ஒரு முன்பதிவு மையங்கள்  என 30 மையங்கள் இன்று முதல் இயங்குகின்றன.


முன்பதிவு மையத்தை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைக்கிறார். இதனிடையே 24 மணி நேரமும் சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி 8,310 மாநகர சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

Also see...

First published: October 24, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading