• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • 5 ஆண்டுகளுக்கு மேல் புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா - அரசாணை

5 ஆண்டுகளுக்கு மேல் புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா - அரசாணை

தமிழக சட்டசபை

தமிழக சட்டசபை

தமிழகத்தில் ஆக்கிரமிப்பு நிலங்களில் நீண்ட காலமாக வசிந்து வருவோர் தங்களுக்கு வரன்முறை செய்து பட்டா வழங்குமாறு அரசிடம் கோரிக்கை விடுத்தனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
தமிழகத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சேபகரமற்ற புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்குவதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆக்கிரமிப்பு நிலங்களில் நீண்ட காலமாக வசிந்து வருவோர் தங்களுக்கு வரன்முறை செய்து பட்டா வழங்குமாறு அரசிடம் கோரிக்கை விடுத்தனர். இதை பரிசீலித்த தமிழக அரசு, ஆட்சேபகரமற்ற புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்குவதற்கான அரசாணை பிறப்பித்துள்ளது.

இதன்படி அனைத்து விதமான நீர்நிலைகள், உள்ளாட்சி அமைப்புகளின் சாலைகள், மாவட்ட- மாநில- தேசிய நெடுஞ்சாலைகளை தவிர்த்த புறம்போக்கு இடங்களில் 5 ஆண்டுகளுக்கு மேலாக வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க ஆணை பிறப்பித்து வருவாய் துறை உத்தரவிட்டுள்ளது.

Also watch

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:DS Gopinath
First published: