தனி வீடுகளில் மழை நீரைச் சேகரிப்பது எப்படி? தெரிந்துகொள்ளுங்கள்

கோப்புப் படம்

சிறிய தனி வீடுகளில் மொட்டை மாடியில் விழும் மழை நீரை கசிவு நீர்க்குழிகள் முறையின் மூலம் சேமிக்கலாம்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    தமிழகத்தில் உள்ள அனைத்து கட்டடங்களிலும் 3 மாதங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்பை கட்டாயம் நிறுவ வேண்டுமென  கடந்த சில தினங்களில் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

    சிறிய தனி வீடுகளில் மொட்டை மாடியில் விழும் மழை நீரை கசிவு நீர்க்குழிகள் முறையின் மூலம் சேமிக்கலாம்.

    வீட்டைச் சுற்றியுள்ள திறந்தவெளிப் பகுதியில் தக்க இடைவெளியில் 1 மீட்டர் நீளம், 1 மீட்டர் அகலம், 1.5 மீ ஆழத்திற்கு குழி அமைக்க வேண்டும்.

    குழியை உடைந்த செங்கற்கள், கூழாங்கற்கள் கொண்டு நிரப்ப வேண்டும். மணற்பாங்கான பகுதிக்கு ஏற்ற முறையான இதில் சுமார் 300 சதுர அடி பரப்பிற்கு ஒரு குழி அமைக்கலாம்.

    பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு உகந்த கசிவு நீர்ப் படுகை முறையில் நீளவாட்டத்தில் கசிவு நீர்க் குழிகளை அமைக்கலாம்.

    1 மீ முதல் 5 மீ வரை தேவைக்கேற்ப நீளம், அரை மீட்டர் முதல் 1 மீ அகலம் மற்றும் அரை மீட்டர் முதல் 1 மீட்டர் ஆழத்தில் குழி அமைக்கலாம்.

    கசிவு நீர்ப்படுகை மற்றும் கசிவு நீர்க்குழிகள் இந்த முறைகளில் குழிகளுக்கு அடியில் போர்வெல் குழாய்கள் அமைத்தும் நீரை விடலாம்.

    பெரிய அடுக்குமாடி கட்டிடங்கள், தொழிற்கூடங்களுக்கு ஏற்ற முறையாக நீரூட்டல் கிணறு முறை உள்ளது. இதில், 3 அடி விட்டம், 5 முதல் 10 அடி ஆழத்திற்கு செங்கற்கள், கான்க்ரீட் உறை கொண்டு கிணறு கட்டலாம்.

    கான்க்ரீட் பலகையில் மூடி வைத்து, அடிப்பகுதியில் 1 அடி உயரம் உடைந்த செங்கற்களை போடலாம். திறந்தவெளி கிணறுகள், போர்வெல் கிணறுகளில் மழை நீரை சேமிக்க வடிகட்டும் குழிகள் அமைக்க வேண்டும்.

    வடிகட்டும் குழி 2 அடி நீளம், 2 அடி அகலம், 2 அடி உயரம் என்ற அளவில் அமைத்து, கீழ்பகுதியில் செங்கல் மேல் பகுதியில் மணலால் நிரப்பப்பட வேண்டும்.

    போர்வெல் கிணறுகளில் விடப்படும் மழை நீர் குறைவான வேகத்தில் செல்வதால் வடிகட்டும் தொட்டியில் அதிகப்படியாக வரும்போது அதை கசிவுநீர்க்குழி அமைத்து அதில் விடலாம்.

    கட்டிடம், வீடுகள் இவற்றின் பரப்பளவு நிலப்பகுதியின் அமைப்பு இவற்றிகேற்றபடி தனியாகவும் ஒருங்கிணைத்தும் மழை நீர் சேகரிப்பு அமைப்புகளை நிறுவலாம்.

    Also see...

    Published by:Vinothini Aandisamy
    First published: