பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் வருமான சான்றிதழ் பெறலாம் - அரசு உத்தரவு

பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு வருமானச் சான்றிதழ் வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் வருமான சான்றிதழ் பெறலாம் - அரசு உத்தரவு
தமிழக அரசு தலைமைச் செயலகம்
  • Share this:
மத்திய அரசுப் பணிகள் மற்றும்  கல்வி நிறுவனங்களில் இடம் பெறுவதற்கு  பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
இதற்கு வருவாய் மற்றும் சொத்து சான்றிதழை வழங்கும்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு 2019-ம் ஆண்டு மே மாதம் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

Also read... தொடர் உயர்வுக்கு இடையே திடீரென குறைந்த தங்கத்தின் விலை - இன்றைய விலை நிலவரம்


இந்த நிலையில் கடந்த ஜூன்  மாதம் மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை மூலமாக பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினருக்கு வருவாய் மற்றும் சொத்து சான்றிதழை நேரடியாகவோ, ஆன்லைன் மூலமாகவோ வழங்க வேண்டாம் அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில், வியாழக்கிழமை தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் கே.பணீந்திர ரெட்டி, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினருக்கு வருவாய் மற்றும் சொத்து சான்றிதழை, 2019-ம் ஆண்டு மே மாதம் சுற்றறிக்கையின்படி தொடர்ந்து வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது வழங்கப்படும் சான்றிதழில், மத்திய அரசுப் பணிகள் அல்லது மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் கல்வி இடம் பெறுவதற்காக விண்ணப்பிக்க மட்டும் சான்றிதழ் வழங்கப்படுகிறது என்று குறிப்பிட்டு வழங்குமாறு தெரிவித்துள்ளார்.
First published: July 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading