சர்க்கரை ரேஷன் அட்டையை அரிசி அட்டைகளாக ஆன்லைனில் மாற்றலாம் - தமிழக அரசு

சர்க்கரை ரேஷன் அட்டையை அரிசி அட்டைகளாக ஆன்லைனில் மாற்றலாம் - தமிழக அரசு
  • Share this:
சர்க்கரை ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் தகுதியின் அடிப்படையில் அரிசி ரேஷன் அட்டைகளாக ஆன்லைனில் மாற்றிக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 

இதுகுறித்து உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை சார்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, “பொது விநியோகத் திட்டத்தில் தற்பொழுது 10,19,491 குடும்ப அட்டைகள் சர்க்கரை குடும்ப அட்டைகளாக உள்ளன.

இந்த குடும்ப அட்டைகளை வைத்திருப்பவர்களில் பெரும்பாலானோர் தங்களுடைய குடும்ப அட்டைகளை அரிசி பெறக்கூடிய குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையினை ஏற்று, தமிழக முதலமைச்சர் இந்த உத்தரவினைப் பிறப்பித்துள்ளார்கள்.


சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள், தங்கள் குடும்ப அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்ய விரும்பினால், அதற்கான விண்ணப்பங்களை தங்களுடைய குடும்ப அட்டையின் நகலினை இணைத்து இன்று முதல் 26.11.2019 வரை என்ற www.tnpds.gov.in  இணைய முகவரியிலும், சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் உதவி ஆணையர்களிடமும் சமர்ப்பிக்கலாம். அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள், உடனடியாகப் பரிசீலனை செய்யப்பட்டு சர்க்கரை குடும்ப அட்டைகள் தகுதியின் அடிப்படையில் அரிசி குடும்ப அட்டைகளாக மாறுதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
First published: November 19, 2019, 3:02 PM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading