ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஆளுநருக்கு எதிரான தமிழ்நாடு அரசின் புகார்... உள்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரைத்த குடியரசுத் தலைவர்..!

ஆளுநருக்கு எதிரான தமிழ்நாடு அரசின் புகார்... உள்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரைத்த குடியரசுத் தலைவர்..!

குடியரசுத் தலைவரிடம் கடிதம்

குடியரசுத் தலைவரிடம் கடிதம்

Governor RN Ravi and Tamilnadu Govt | ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு அளித்த கடிதத்தை மத்திய உள் துறை அமைச்சகத்திற்கு அனுப்பினார் குடியரசுத் தலைவர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India

நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளும் திமுக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் இடையே மோதல் வெடித்தது. பேரவை கூட்டத்தொடரின் முதல் நாளில் ஆளுநர் உரையின் போது தமிழ்நாடு அரசு தயாரித்துக் கொடுத்த அறிக்கையில் இடம்பெற்ற சில பகுதிகளை படிக்காமல் தவிர்த்தார். இது அவையில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வாசித்துக் கொண்டிருக்கும் போதே, ஆளுநர் ஆர்.என்.ரவி பேரவையில் இருந்து வெளியேறினார்.

இதுதொடர்பாக திமுக மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, தமிழ்நாடு சட்ட அமைச்சர் ரகுபதி அடங்கிய குழுவினர் குடியரசுத் தலைவர்  திரவுபதி முர்முவை சந்தித்து தமிழ்நாடு முதலமைச்சர் எழுதிய கடிதத்தை சீலிட்ட கவரில் வழங்கினர். சுமார் 20 நிமிடங்கள் வரை நீடித்த இந்த சந்திப்பின் போது, தமிழ்நாடு மக்கள் மற்றும் அரசியல் சாசனத்திற்கு எதிரான ஆளுநரின் செயல்பாடுகள் இருப்பதாக குடியரசுத் தலைவரிடம் எடுத்துரைத்தனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் சார்பில் அளிக்கப்பட்ட புகார் கடிதம் மத்திய உள் துறை அமைச்சகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவரின் குறிப்புடன் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: RN Ravi, TN Govt